இருபா இருபது
மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.
உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.
திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்
இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்
உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்
திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்
வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்
போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்
கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்
நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்
சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்
இந்நூலின் முதற் செய்யுள் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது. கடவுளே குருவாக வந்து அருள்புரிதலினாலும், குரு கடவுளுக்குச் சமமானதாலும், ஆசிரியர் அருள்நந்தி சிவாச்சாரியார், தமது குருவாகின மெய்கண்டதேவரையே கடவுளாகவைத்துப் போற்றித் துதித்துள்ளார்.
'சிவபெருமானே தன்னுடைய நெற்றிக் கண்ணையும். திருநீலகண்டத்தினையும் மறைத்து, திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டதேவர் என்னும் பெயரும் திருவுரு வமும் கொண்டு எழுந்தருளிப் போந்து, உலக மக்களின் மலமாசுகளைப் போக்கியருள்கின்றார். அவரை ஒருமுறை சென்று பொருந்தி நினைத்துத் தொழுபவர்கள், உயிருக்குயிராக உள்ள சிவபெருமானைத் தம்முடைய உள்ளத்தின் கண் தெளிவுறக் கண்டறியும் பேறு பெற்றவர்கள் ஆவர் என்பது இம்முதற்பாடலின் கருத்து. இதனால் சிவபெரு மானே மெய்கண்ட தேவராக எழுந்தருளித் தமக்கு அருள் யூரிந்தனர் என ஆசிரியர் புகழ்ந்து துதிக்கின்றார்
கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!
காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்
பேரா இன்பத்து இருத்திய பெரும!
வினவல் ஆனாது உடையேன் எனது உளம்
நீங்கா நிலை ஊங்கும் உளையால்
அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்
ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்
சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!
இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்
வேறோ உடனோ விளம்பல் வேண்டும்
சீறி அருளல் சிறுமை உடைத்தால்.
அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்
அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்
பக்குவம் அதனால் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே
மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ
நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
இணை இலி ஆயினை என்பதை அறியேன்
யானே நீக்கினும் தானே நீங்கினும்
கோனே வேண்டா கூறல் வேண்டும்
"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே?
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே?
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே?
உகுகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே?
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே?
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே?
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே?
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?
ஆட்பா லவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை; கிளக்கவேண்டா;
கோட்பா லனவும் விளையும் குறுகாமை எந்தை
தாட்பால்வணங்கித் தலை நின்று இவைகேட்கத் தக்கார்
No comments:
Post a Comment