Thursday, July 20, 2023

ஞானத்தேடல் - Ep 98 - கல்வியின் மகத்துவம் - (Power of Education)


 கல்வி


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர் (393)


கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு (397)


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. (398)


பாடை ஏறினும் ஏடது கைவிடேல்


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு  (396)


கண்டதை கற்க பண்டிதர் ஆவார்


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (391)


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!

நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்!

Wednesday, July 12, 2023

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)


அனுபவ ஞானம் 


வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்

தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க

ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?

செல்வம் வந்துற்ற போது தெய்வமும்

      சிறிது பேணார்

சொல்வதை அறிந்து சொல்லார்

      சுற்றமும் துணையும் பேணார்

வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை

      வலிதென்று எண்ணார்

வல்வினை விளைவும் பாரார் மண்ணின்

      மேல் வாழும் மாந்தர்.

ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்

ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார்

ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்

பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார்


Monday, July 10, 2023

ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)

 

பதார்த்த சூடாமணி


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Yaazhpaanam Irupaalai Chettiar has written a text call Padhartha Soodamani. Let's explore it in this episode.


References


எள்ளெண்ணெய்


இவ்வெண்ணெய் காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம்

கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ

டெவ்வமார் கிருமி போக்கு மெழிலுங்கண் ணொளியு முண்டாம்

செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே.


அறைக்கீரை, சிறுகீரை


அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல்

சுறுக்கதாய் நீக்குமென்ப சொல்லுபத் தியத்திற் காகும்

வெறுப்பிலா சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில்

பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே.


பொன்னாங்காணி


அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்

முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம்

குதியினில் வாத மோடு கொடியபீ விகையும் போகும்

மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்.


மாம்பிஞ்சு -பழம் - காய் - பூ -வித்து


வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார் கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்.


சிற்றரத்தை


கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குனரத்தினைச் சொல்வன் கேண்மோ

ஊறுசெய் சன்னி தோஷ் கரமுறு மூன்று தோஷம்

மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு

தேறுபீ னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றானும்.


திப்பிலி


திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம்

சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம்

குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம்

பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே

Saturday, July 01, 2023

ஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


செருவிளை, கருவிளை

யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகும்.


செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர்.


‌செருவிளை

செரு = வயல்

வயலில் விளையும் மலர்


கருவிளை

வயல் அல்லாத மேட்டில் பூக்கும் மலர்


கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


இலக்கியங்களில் கருவிளை


"மணி கண்டன்ன மா நிறக் கருவிளை"

- நற்றிணைப் (221 : 1) 


"கருவிளை முரணிய தண்புதல் பகன்றை" 

- அகநானூறு (255 : 11) 


"நீலப்பைம்போது உளரி, புதல பீலி ஒண்பொறிக் கருவிளை" 

- குறுந்தொகை  (110 : 3-4) 


"காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணின் கருவிளை மலர”

- அகநானூறு (294 : 4-5)  


"கண்ணெனக் கருவிளை மலர"

- ஐங்குறுநூறு (464 : 1) 


இதன் இலை, வேர், மற்றும் விதை முதலியவை மருத்துவக் குணம் கொண்டவை. இது சிறுநீர் பெருக்கும்; குடற்பூச்சிகளைக் கொல்லும்; வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்படுகிறது


பயினி


சிறு காரோடன் பயினொடு சேர்த்திய

கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்

மறந்தனர்கொல்லோ தோழி

- அகநானூறு (356 : 9) 


"பயில்பூம் பயினி"

- பெருங்கதை  சொற்றொடரைப் பார்த்தால், பயினிமரத்தில் பூக்கள்அடர்ந்திருக்கும் என அறியலாம்.

வானி


இளஞ்சேரல் இரும்பொறை, 

"சாந்துவரு வானி நீரினும்,தீம்தண் சாயலன்" 


புனல்பாய் மகளி ராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்

சாந்து வருவானி நீரினும்

தீந்தண் சாயலன் மன்ற தானே


புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு

வருநர் வரையாச் செழும்பல் தாரம்

கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப


- பதிற்றுப்பத்து 

பெருங்குன்றூர் கிழார்

ஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை 

தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Flowers in Kurinji Paatu

Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji

References

குறிஞ்சிப் பாட்டு

‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

குடசம்

.குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
- சிலப்பதிகாரம் 

கரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு

வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும்
காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப்
பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம்
இங்குக் குடசப் பாலைக்கே”
- அகத்தியர் குணபாடம்

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை

எருவை

வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .[219 - 224]
மலைபடுகடாம்

கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை
எருவை கோப்ப எழில் அணி திருவில்
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்
கூனி வளைத்த சுனை
- பரிபாடல்

எருவை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘பஞ்சாய்க்கோரை’ என்றும் ‘கொறுக்கச்சியுமாம்’ என்றும் உரை கண்டார்

எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261
எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை - பரிபாடல் 19-77

பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
-  குறுந்தொகை 170

கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269

ஐங்குறுநூறு -  வேழப் பத்து

மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே.

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே.

பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே

கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே.

மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.

ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.

புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
.புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.

இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.

ஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal)


 அனுபவ ஞானம் 


அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ

கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்

நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?

பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று

தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார்

மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில்

பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே!


திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி

இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்

இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே