Wednesday, September 14, 2022

ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)


 சித்திர கவி - கோமூத்திரி பந்தம்


சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


Chithira Kavi - Komoothri Bandham


Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode


References


தண்டியலங்காரம் - Thandialangaaram


பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவி லாயிழை பூவணி காலமே


தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்

இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.

மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து

கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்

இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த

அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்

உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்

தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.


Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png


Also see - https://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

Friday, September 09, 2022

ஞானத்தேடல் - Ep 54 - புலவரை துரத்திய புலி - (Gnanathedal)


புலவரை துரத்திய புலி

புலவரை துரத்திய புலி பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Tiger that chased a Poet


Let's see about an interesting story of a tiger that chased a poet in this episode


References


சங்கர சிந்தாமணிப் புலவர்


பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு 

வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து 

மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற 

தையாமென் போடை யதிபா புலவர்க் கருணிதியே


- பங்காரு திருமலை நாயக்கர் (1840-1862)

- திருமலை போடைய காமராச பாண்டியர் (1862 - 1888)


Thursday, September 01, 2022

ஞானத்தேடல் - Ep 53 - குமரேச சதகம் - (Gnanathedal)

 


குமரேச சதகம் குமரமலை, குமரேச சதகம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Kumaresa Sadhagam Let's explore about Kumara Malai and Kumaresa Sadhagam in this episode References குமரேச சதகம் முருகன் திருவிளையாடல் பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும், புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும் பாதனைச் சிறையில் வைத்தும், தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும் செகுக்கமுடி யாஅசுரனைத் தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு செய்தமரர் சிறைதவிர்த்தும், நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில் நினைக்குமுன் வந்துதவியும், நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை நிகரான தெய்வமுண்டோ மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி மார்பனே! வள்ளிகணவா! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (1) பலர்க்கும் பயன்படுவன கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய கோவுமூ ருணியின் நீரும் கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும், குடியாளர் விவசாயமும், கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற் கனிபல பழுத்தமரமும், கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும் காவேரி போலூற்றமும், விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும், வீசும்மா ருதசீதமும், விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும் வெகுசனர்க்கு பகாரமாம், வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப மார்பனே வடிவேலவா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே. (16)