Sunday, February 12, 2023

ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal)


 காலக்கணக்கு

2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 

 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை

 2 மாத்திரை கொண்டது - குரு 

 2 குரு கொண்டது - உயிர் 

 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 

12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 

60 விநாடி கொண்டது - நாழிகை

 7.5 நாழிகை கொண்டது - சாமம்

 4 சாமம் கொண்டது - பொழுது 

 2 பொழுது கொண்டது - நாள்

30 நாள் கொண்டது - மாதம்

12 மாதம் கொண்டது - வருஷம். 


யுகங்கட்கு ஆண்டு அறிதல்


இருநூற் றொருபதுடன் ஆறா யிரத்தை 

இருநால் இருமூன்றின் நாலில் - நிருமித்த 

பின்னிரண்டு தன்னில் பெருக்கில் திருமாதே 

நண்ணுமொரு நாலுகத்தின் சீர்


உரை: அழகிய திருமகளுக்கு ஒப்பானவளே! கிரேதாயுகம், திரேதாயுகம். துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் ஆண்டுகள் எவ்வளவு எனின். இருநூற்றுப் பதினாறாயிரத்தை (உாகயசுசூ) எட்டிலும் ஆறிலும் நாலிலும் இரண்டிலும் பெருக்க, எட்டில் பெருக்கிய பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம் கிரேதாயுகத்து ஆண்டு எனவும். ஆறில் பெருக்க, பன்னிரண்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஆறாயிரம் திரோதாயுகத்து ஆண்டு எனவும். நான்கில் பெருக்க எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் துவாபரயுகத்து ஆண்டு எனவும். இரண்டில் பெருக்க நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் கலியுக ஆண்டு எனவும். இந்த நான்கு யுகமுங்கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்: இஃதொரு சதுர்யுகம் என்று சொல்லப்படும்.

தேவகாலம் அறிதல்


எண்ணுஞ் சதுர்யுகமீ ராயிரங் கூடில் 

நண்ணுஞ் சதுர்முகத்தோன் நாளாகும் பெண்ணணங்கே

ஐயாறு திங்களே ஆறிரண்டும் ஆனதே 

பொய்யாத நூறும் புகும்.


உரை : திருமகளுக்கு ஒப்பானவளே! மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது நான்முகனுக்குப் பேராயுள். இந்தப் பேராயில் நூறு (m) சென்றால் ஆதிநான்முகனுக்கு யுகம் முடிவு.

நான்கு யுகமுங் கூடின ஆண்டு நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதாயிரம் இது மகாயுகம் என்று சொல்லப்படும். இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு அரசாட்சி: இந்த மனுவுக்கு அரசாட்சி எழுபத்து நான்கு சென்றால் இந்திரனுக்கு அரசாட்சி. இந்திரனுக்கு இந்த அரசாட்சி இருநூற்று எழுபது சென்றால் நான்முகனுக்கு ஒருநாள் இந்நாள் முப்பது சென்றால் ஒரு திங்கள்: இத்திங்கள் பன்னிரண்டு சென்றால் ஓர் ஆண்டு. இந்த ஆண்டு நூறு சென்றால் நான்முகனுக்கு வாணாள் முடிவு. இவ்வாறு முந்நூற்று அறுபது சென்றால் ஆதிநான்முகனுக்குப் பிரளய காலம் பிரளய காலம் நூறு சென்றால் திருமாலுக்கு ஒரு கற்பம் இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு மயிர் உதிரும். இந்த உரோமச மகா இருடிக்குப் பத்துக்கோடி மயிர் உதிர்ந்தால். மீனச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு செதிள் உதிரும். இவ்வாறு மீனச மகாஇருடிக்கு ஒரு கோடி செதிள் உதிர்ந்தால் பரத்துவாச மகாஇருடிக்கு ஒரு நிமிடம். இந்தப் பரத்துவாச மகாஇருடிக்கு இவ்வாறு முப்பது கோடி சென்றால் மகாசத்தி தலைமயிர் அவிழ்த்து முடிப்பாள். இவ்வாறு எழுநூற்று எண்பதுகோடி சத்திகள் தலைமயிர் அவிழ்த்து முடித்தால். இறைவனுக்கு அண்மையில் இருக்கின்ற உருத்திரமாகாளிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லப்பெறும்.

ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - சுழிகுளம்


கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா

முயல்வ துறுநர்

திருவ ழிந்துமாயா


செய்யுளால் முதிர்ந்தார் செய்யும் செய்யுளே விலையிடுதற்கரிய செய்யுளெனவும், இடைவிடாது முயல்வார் செல்வமழிந்து கெடாதெனவு மாம்.


மதந  விராகா வாமா

தநத  சகாவே நீவா

நதத நதாதா வேகா

விசந விரோதா காரா


மதனா! அவா இல்லாதவனே! ஒளியை உடைய வனே! குபேரனுக்கு நண்பனாகவுள்ளானே! முகிலினுமதிகமான வள்ளலே! பாம்பணியால் விரோதமான தோற்றத்தையுடையவனே! எங்கள் வருத்தங்களை நீக்கிக் காப்பாயாக!

Wednesday, February 08, 2023

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

ஞானத்தேடல் - Ep 71 - சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கரபந்தம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கர பந்தம்


தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த

கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த

பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க

தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே


அன்புள்ள மக்களை உடைய நாகையில், யாழ் பயிலும் அழகிய பெண்களின் தாமரை மலரைப் போன்ற கண்களை மன்மதன் அம்பினால் காதல் வயப்பட்டு நீலமலரைப் போன்ற கண்களையும் கூட ஒப்பாக  கூற முடியாது


போதிவானவன்


மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க

மடமயி லியற்றக மாதிரம் புதைத்து

வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க

வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி

மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்

கன்னித் துறைவன் கனகச் சிலம்பே


வளவனின் தலைவி அகமகிழ்வோடு மலர்ந்த சோலையில் இருக்கிறாள் எவ்வாறெனில். மயில்கள் தோகை விரித்து ஆடும்போது கார்மேகம் சூழ்ந்து தேன் நிறைந்த மலர்களில் தேனீக்கள் தேன் உண்ணும், அது போல் தலைவியின் நீளமான மலர் சூடிய கரிய கூந்தல் இருந்தது


அறமே தனமாவது