நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே
- புறநானூறு (184)
வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை மிக அழகாக அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாக இந்த பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
பாடலின் விளக்கம்: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.
அறந்துஞ்சும் உறந்தை
அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்று ஒரு பாடலில் இவர் குறிப்பிட்ட உவமை கோப்பெருஞ்சோழன் மீது இவர் கொண்டிருந்த பற்றியும் நாட்டின் வளத்தையும் அழகாக விளக்குகிறது.
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
- புறநானூறு (191)
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!
- புறநானூறு (217)
என்று வியந்து வியந்து பாடி உருகினார்.. தானும் வடகிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.
உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.
சங்க கால புலவர்களின் வாழ்க்கை நமக்கு மொழியை மட்டும் புகட்ட வில்லை. மொழியோடு காலத்தால் அழியாத பல உண்மைகளையும் மனிதன் வாழும் நெறிகளையும், உயர்ந்த ஞானத்தையும் நமக்கு வழங்குகின்றன
No comments:
Post a Comment