Wednesday, October 27, 2021

ஞானத்தேடல் - Episode 17 - நிரோட்டகம் - அநாசிக இதழகல்


 நிரோட்டகம் - அநாசிக இதழகல் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நிரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  அநாசிக எழுத்துக்கள்: க, ச, ட, த, ப, ற, ய, ர, ல, வ, ள, ழ,  ஆகியவை. 

பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள். 

கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.   

இந்த அநாசிக எழுத்துக்களை கொண்டு ஒரு இதழகல் பாடல் பாடுவது என்பது மிக கடினமான ஒன்று. அதை மாம்பழ கவிச்சிங்க நாவலர்  பத்து நிமிடத்தில் பாடினார் என்பது மேலும் ஆச்சரியமூட்டும் செய்தி. 

இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்ட யமக அந்தாதி  வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 

Nirotagam Anaasiga Idhazhagal - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. 

Tamil language has nasals and non-nasals in its alphabets. Singing a poem that is an Idhazhagal, that too using only the non-nasals is an amazing task. The poet Mambazha Kavichchinga Naavalar wrote such a poem in 10 minutes.

Works like these enrich the Tamil language. In this episode let's explore that Nirotagam...

Wednesday, October 20, 2021

ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal)


யாருக்கு கடன் (கடமை) 

ஒருவர் பிறந்து வளரும்போது அவரை வளர்க்க பலருக்கு கடமை உண்டு. ஆப்படி யார் யாருக்கு என்ன என்ன கடமை என்பதை புரநானூற்று பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆது இன்றும் பல சந்தர்ப்பங்களில் பல இடத்திலும் பொருத்தமாக இருப்பது பெரும் வியப்பே. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... 

Whose responsibility?

Many people take responsibility in raising a child from childhood to adulthood. A song in Puranaanooru describes who has what responsibilities in raising a child. It is amazing to see that the message in the song applies to other situations and places as well. Let's explore that in this episode...

 

Monday, October 18, 2021

ஞானத்தேடல் - Episode 15 - நிரோட்டக யமக அந்தாதி (Gnanathedal)


 நிரோட்டக யமக அந்தாதி் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  இதில் யமகம் என்னும் அமைப்பு ஒரே சொல் வேறு வேறு பொருளுடன் வருவது. மேலும் அந்தாதி என்பது முதல் பாடலின் இறுதி சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வருவது.  இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நிரோட்டக யமக அந்தாதி  வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....

Nirotaga Yamaga Andhaadhi - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. Adding to the complexity is the Yamagam form, in which the same word repeats in each line giving a different meaning. Andhaadhi is a form where the last word of the first song becomes the first word of the next song. Works like these enrich the Tamil language. In this episode let's explore Nirotagam...

References

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே

யானைக்கண்‌ தங்கு அரி சென்று ஏத்‌து எழில்‌ செந்தில்‌, இன்று அடைந்தே
யான்‌ ஐ கண்டம்‌ கரியற்கு, அம்‌ கயிலையை ஏய்ந்த தகை
ஆன் ‌ஐக்கு அண்டம் கரிசேர்‌ எண்‌ திக்கு ஆக்கினர்க்கு ஈ நல் இசை
யானைக்  கண்டு அங்கு அரிதாக சீர்க்கதி எய்‌தினனே

Thursday, October 07, 2021

ஞானத்தேடல் - Episode 14 - இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு

 


இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு


மனித வாழ்வில் வரும் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பலர் பல பாடல்கள் மூலம் தீர்வுகள்  மற்றும் அறிவுரைகள் கூறி உள்ளார்கள்.  திருக்குறள் முதல் பல நூல்களில் இதற்கு வழிகள் கூறப்பட்டுள்ளது அதில் கதை உதாரணத்துடன் .சொல்வது விவேக சிந்தாமணி. அதை இந்த பதிவில் பார்ப்போம்... 


Solutions to problems in Tamil literature 

Tamil literature has numerous works that provide solutions to problems faced by humans in their life. Right from Thirukkural a lot of works provide different solutions. Of which, Viveka Chinthamani provides with a small story like illustration. Let's explore it in this episode...