Thursday, August 25, 2022

ஞானத்தேடல் - Ep 52 - 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) - (Gnanathedal)


18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy)

18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...

Awareness of Privacy in the 18th century Tamil Literature Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode References அறப்பளீசுர சதகம் சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதில் கிரகச் சார முந் தின்றுவரு மௌடதமு மேலான தேசிகன் செப்பிய மகா மந்த்ரமும் புன்மையவ மானமுந் தானமும் பைம்பொனணி புனையுமட வார் கலவியும் புகழ்மேவு மானமு மிவையொன்ப துந்தமது புந்திக்கு ளேவைப் பதே தன்மமென் றுரைசெய்யவ ரொன்னார் கருத்தையுந் தன்பிணி யையும் பசியையுந் தான்செய்த பாவமு மிவையெலாம் வேறொருவர் தஞ்செவியில் வைப்ப தியல்பாம் அன்மருவு கண்டனே மூன்றுலகு மீன் றவுமை அன்பனே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. (39) சொல்லக்கூடாதது - பிறந்த வருடம் - செல்வம் - ஜாதகம் - உண்ணும் மருந்து - குரு உபதேசித்த மந்திரமும் - அவமானம் - தானம் - பெண்களிடம் இருக்கும் காதல் நெருக்கம் - புகழ் தரும் மானம் சொல்ல வேண்டியது - எதிரிகள் கருத்து - தன் பிணி பசி - தான் செய்த பாவம்

Thursday, August 18, 2022

ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal)

 


பதார்த்த குண சிந்தாமணி

தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Theraiyar has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References சுட்ட நீர் நெஞ்செரிப்பு நெற்றிவவி நீங்காப் புளியேப்பம் வஞ்சமுற வந்த வயிற்றினோய் விஞ்சியே வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர் ஆழாக்குட் கொள்ளவறும். கால்கூறு, அரைக்கூறு, காய்ந்த வெந்நீரின் குணம் காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போ மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரால் - மேற்கூறும் வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு ரோகம்போ மோடி யொளித்து, முக்காற்கூறு காய்ந்த வெந்நீரின் குணம் முப்பங்கறக் காய்ந்த முத்தவெந்நீ ரால்வாதஞ் செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெங் கைப்பலநோய் வாதபித்த மையமிவை மாறுஞ் சுரிகுழலே பூதலத்து நாளும்புகல் விளாங்கனி எப்போது மெய்க்கிதமா மீளையிருமல்‌ கபமும்‌ வெப்பாகுந்‌ தாகமும்போ மெய்ப்பசியா மிப்புவியி லென்றாகிலும்‌ கனிமே லிச்சைவைத்‌துத்‌ தின்னவெண்ணித்‌ தின்றால்‌ விளாங்கனியை தின்‌. மணத்தக்காளி காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபிணியோர்க் காகும் மணத்தக்கா ளிக்குள்ள வாறு. கிழங்கான் மீன் பத்தியத்திற் கேற்ற பருங்கிழங்கான் மீன்அருந்த உற்ற பிணியனைத்தும் ஒடுங்காண்-மெத்தப் பசியெழும்புஞ் சேர்ந்த பழமலமுஞ் சாறும் முசியா துடல்வளரு முன்


ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal)

 


நோய் தீர்க்கும் பாடல்கள் - 1

ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got sick and sang 10 Pasurams to get cured. It is believed that those who sing these pasurams get their illness cured. Let's explore about it in this episode References 1. நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 2. சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறிஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடிஒளித்தார் முத்துத் திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன்அடியேன் பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 3. வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 9 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 10 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே.

Sunday, August 07, 2022

ஞானத்தேடல் - Ep 49 - கலிகாலத்தின் கொடுமை - (Gnanathedal)

 


கலிகாலத்தின் கொடுமை கலிகாலத்தின் கொடுமை பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Effects of Kaliyugam Let's explore about effects of Kaliyugam in this episode References குமரேச சதகம் தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர் தந்தையைச் சீறுகாலம் சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச் சற்றும்எண் ணாதகாலம் பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம் புரட்டருக் கேற்றகாலம் பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்நற் பெரியர்சொல் கேளாதகாலம் தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்மிகு சிறியவன் பெருகுகாலம் செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்வசை செப்புவோர்க் குதவுகாலம் வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு வாய்த்தகலி காலம்ஐயா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (57)

Monday, August 01, 2022

ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal)

 


கோபம் தவிர் கோபம் பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது தவிர்க்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Poverty Let's explore about what Tamil literature says about anger and the ways to manage it in this episode References ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே - விவேக சிந்தாமணி வெகுளாமை அதிகாரம் செல்லிடத்துக் காப்பான் சீனங்காப்பான் அல்லிடத்து காக்கின் என்ன காவாக்கால் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - அதிகாரம்:இன்னா செய்யாமை அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் - அதிகாரம்:அறன் வலியுறுத்தல் காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் - அதிகாரம்:மெய்யுணர்தல் ஆறுவது சினம் – ஆத்திச்சூடி கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - மூதுரை நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம் - நாலடியார் வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே (2303) - திருமந்திரம் உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு? - நன்னெறி, சிவப்பிரகாச சுவாமிகள்