Monday, February 26, 2024

ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)


 சகுனம் - 2


சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Sagunam (Signs/Omen) - 2


Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode


References


சகுனம்

சொல்லரியகருடன்வா னரமரவ மூஞ்சூறு

சூகரங் கீரி கலைமான்

றுய்யபா ரத்வாச மட்டையெலி புன்கூகை

சொற்பெருக மருவு மாந்தை

வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

விளங்குமிரு நா வுடும்பு

மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில்

வெற்றியுண் டதிக நலமாம்

ஒல்லையின் வழிப்பயண மாகுமவர் தலைதாக்க

லொருதுடை யிருத்தல் பற்ற

லொருதும்ம லாணையிட லிருமல்போ கேலென்ன

வுபசுருதி சொல்லியவை யெலாம்

அல்லறரு நல்லவல வென்பர்முதி யோர்பரவு

மமலனே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 62


இதுவுமது


நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

நாலி சிச்சிலி யோந்திதான்

நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

நாடரிய சுரபி மறையோர்

வரியுழுவை முயலிவை யனைத்தும்வல மாயிடின்

வழிப்பயண மாகை நன்றா

மற்றுமிவை யன்றியே குதிரையனு மானித்தல்

வாய்ச்சொல் வாவா வென்றிடல்

தருவளை தொனித்திடுதல் கொம்புகிடு முடியரசர்

தப்பட்டை யொலிவல் வேட்டுத்

தணிமணி முழுக்கொழுத லிவையெலா மூர்வழி

தனக்கே நன்மை யென்பர்

அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

வண்ணலே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 63


இதுவுமது


தலைவிரித் தெதிர்வருத லொற்றைப் பிராமணன்

றவசி சன்னாசி தட்டான்

றனமிலா வெறுமார்பி மூக்கறைபுல் விறகுதலை

தட்டைமுடி மொட்டைத் தலை

கலன்கழி மடைந்தையர் குசலக்கலஞ் செக்கான்

கதித்ததில் தைல மிவைகள்

காணவெதிர் வரவொணா நீர்க்குட மெருக்கூடை

கனிபுலா லுபய மறையோர்

நலமிகு சுமங்கலை கிழங்கு சூதகமங்கை

நாளும் வண்ணா னழுக்கும்

நசைபெருகு பாற்கலச மணிவளையன் மலரிலைக

னாடியெதிர் வர நன்மையாம்

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் பரசணியு

மண்ணலே யருமை மதவே

ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 64


துடிநூல்


சீருடனே துடிக்கிலுச்சி யிடரேநீங்கும்

     சிறந்தவுச்சிவலந்துடிக்கி லச்சஞ்சொல்லும்

பேருடனேவுச்சியிடம் பெருமையாகும்

    பின்றலையே துடிக்கிற் சத்துருக்களுண்டாம்

சார்புடனேதலையடங்கற் றுடிக்குமாகின்

    றலைவனாற்பெருமை சம்பத்துமுண்டாம்

நேருடனேநெற்றியிடத் துடிக்குமாகின்

    நேர்வார்த்தைசம்பத்து நிறையவாமே


‘நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்

சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-

பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்

வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.


‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்


‘மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:

அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,

பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே


‘நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்று இரங்குவாய்! அடுப்பது யாது?’ என்றாள்


உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து

கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென் 

- சிலப்பதிகாரம்


No comments: