Thursday, January 20, 2022

ஞானத்தேடல் - Ep 29 - விதி பற்றி இலக்கியங்கள் (Gnanathedal)


 

விதி பற்றி இலக்கியங்கள்

விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate - What literature says Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai திருக்குறள் - Thirukkural வில்லிபாரதம் - Villibharatham சிலப்பதிகாரம் - Silappadhikaaram பாரதியார் பாடல்கள் - Bharathiar Paadalgal அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம் நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம் அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே? நரி வகுத்த வரையினிலே தெரிந்து சிங்கம் தழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழது உஞற்று பவர் (620) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (380) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377) மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’

Wednesday, January 12, 2022

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன் கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா இருந்தேனுக் கெங்கே யிடம். விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும் வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது. சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி

Friday, January 07, 2022

ஞானத்தேடல் - Ep 27 - புலவர்கள் போட்டி - 2 (Gnanathedal)

 


புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ! எட்டேகால் லட்சணமே! எமனே றும்பரியே! மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற் கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே! ஆரையடா சொன்னா யடா