Saturday, November 25, 2023

ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்


செருந்தி


ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

– கலித்தொகை


எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங்குறுநூறு 


இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலமரும் கழனி ஊரன்

பொருந்தும் மலரன்ன என் கண் அழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே - ஐங்குறுநூறு 18



அதிரல்


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்,

பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,

நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய  5

செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,

அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்

தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்

அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,

பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

- நற்றிணை 337


மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும்

இதனைப் `புனலிக்கொடி’ என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர்.

புனலிக்கொடி, புனலிப் பூ, புனலி , புனலி (புனல் + இ), மென்கொடி’, ‘பைங்கொடி, மோசி மல்லிகையும்.


முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3


குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1

“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன

 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”⁠-அகநா. 391 : 1-2


.... கோங்கின்

 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்

 பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி

 காண் யானை கவளங் கொள்ளும்

 அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்

 கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”⁠-அகநா. 157 


அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81


சண்பகம்


செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம், குக்கில். குயில் 


பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்

வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு

அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு

பெயல் தொடங்கின்றே வானம்;

காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!

ஐங்குறுநூறு 469


கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,

முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி     

பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,

கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்

சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,

அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,

அகநானூறு 63


தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்

குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,

குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்

தப்பியார் அட்ட களத்து - களவழி நாற்பது 5


பெருந்தண் சண்பகம். 

 

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் - கலி 150/21

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22


தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை 

ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.


‘களிப்புறு நறுமணமரம்’


வண்டுணா செண்பகம் ;


வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் - பரிபாடல் 


பன்னிய பாரம் பார்ம கட் கொழியப்

பாரத மாபெரும் போரில்,

மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர்

மைத்துனர்க் குய்த்தமா மாயன்,

துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும்

சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி - பாசுரம் 1756


கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்

களித்திசை பாடும் குயிலே”

என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி).

No comments: