சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன்
Sálim Moizuddin Abdul Ali (12 November 1896 – 20 June 1987) was an Indian ornithologist and naturalist. Sometimes referred to as the "Birdman of India", Salim Ali was the first Indian to conduct systematic bird surveys across India and wrote several bird books that popularized ornithology in India. Along with Sidney Dillon Ripley he wrote the landmark ten volume Handbook of the Birds of India and Pakistan
வரலாறு எழுதிய முதல் தமிழன் பரணர்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள்.
பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே
- புறநானூறு - 99
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
- அகநானூறு 142
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10
- அகநானூறு 148
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
அரசன் ஆய்எயினன் சிறந்த குதிரைவீரன். தேர்வீரன் ஞிமிலியைத் தாக்கினான். போர்க்களத்திலையே எயினன் மாண்டுபோனான்.
எயினன் பறவைகளைப் பாதுகாத்து வந்தவன்.
அவன் மாண்டுகிடப்பதைப் பிணம் தின்னும் கூகை கண்ணால்கூடக் காண விரும்பவில்லை. எனவே இனி எல்லாப் பகலிலும் வெளியில் வருவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது.
பார்வைக் கூர்மையான கூகையின் கண்கள் பகலில் கூசும். இரவில் நன்றாகத் தெரியும். அதனால் அது பகலில் வெளிவருவதில்லை. இதனைப் புலவர் இவ்வாறு கூறுகிறார். இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டியலங்காரம் 56)
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
- அகநானூறு 181
யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான்''
- அகநானூறு 208
நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார்.
ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது
ஆதிமந்தி—ஆட்டநத்தி
அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது.
கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன்.
ஆவியர் குடிக்கு மன்னன். ‘வையாவிக்கோப் பெரும்பேகன்’ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான்.
“முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! – நக்கீரர்.
என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !
No comments:
Post a Comment