Monday, August 28, 2023

ஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பசும்பிடி, வகுளம், காயா


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References


பசும்பிடி = பச்சிலைப் பூ

பசும்பிடி -  பச்சிலைமரம்.


கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்

 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

- பதிற்றுப்பத்து (81)


பசும்பிடி இளமுகிழ், நெகிழ்த்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்

- பரிபாடல்


பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்

- பரிபாடல் (19).


வகுளம் = மகிழம் பூ


மகிழம்பூ, இலஞ்சிப்பூ என மணம்கமழும் பெயர்கள்.


இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான (Mimusops Elengi)


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், 

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்

மலர்சொரி வகுளமு மயங்கிக்


முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி


கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய

வோடு தோ்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங்


குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன;


மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4).


காயாம் பூ


காடுகள் அழிந்தாலும் காயா அழியாது

காயா - காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர்.


காசாங்காடு, காசாங்குளம்‌ என் ஊர்ப்பெயர்களும் உள


திருமால் தெய்வத்தை காயாம்பூ மேனியன் என்பர்.


கருவிளை யொண்மலர்காள்  காயா மலர்காள்  திருமால் உருவொளி  காட்டுகின்றீர்  -நாச்சியார்  திருமொழி.


கருநனைக் காயாக் கணமயில் அவிழவும்,

- சிறுபாணாற்றுப்படை (165)


புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை

மென்மயில் எருத்தின்தோன்றும்”

- குறுந்தொகை (183)


பூவை -  நாகணவாய்ப் புள் (மைனா )


மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொன்னைப்போல் பொரு இல் மேனி,

     பூவைப் பூ வண்ணத்தான், இம்

மின்னைப்போல் இடையாளோடும் மேவும்

     மெய் உடையன் அல்லன்;

தன்னைப்போல் தகையோர் இல்லா,

     தளிரைப்போல் அடியினாளும்,

என்னைப்போல் இடையே வந்தாள்;

     இகழ்விப்பென் இவளை' என்னா,


பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;


இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை

பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்

பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே

தூதுரைத்து வாங்கும் தொடை


கடலோ? மழையோ? முழு நீலக்

   கல்லோ? காயா நறும் போதோ?

படர் பூங் குவளை நாள்மலரோ?

   நீலோற்பலமோ? பானலோ?-

இடர்சேர் மடவார் உயிர் உண்பது

   யாதோ?’ என்று தளர்வாள்முன்.

மடல் சேர் தாரான் நிறம் போலும்

   அந்தி மாலை வந்ததுவே!


வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்

பொலஞ் சுழிஎன்றலும் புன்மை; பூவொடு

நிலம் சுழித்துஎழு மணி உந்தி நேர், இனி,

இலஞ்சியும்போலும் ? வேறு உவமை யாண்டுஅரோ ?


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம்.


இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை கோட்டைச் சுவர், மதில், மகிழமரம் எனப்பல பொருள்படும்.


இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று

     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.


இலஞ்சி வேலவர் பிள்ளைத்தமிழ் -   கவிராச பண்டாரத்தையா. காலம் 19ம் நூற்றாண்டு.


மன்றுதொறாடல் உவந்தவர் கயிலையும்


மணிமாடக் கந்தமாதன பூதரமும் பொன் மயில்கள் மலர்க்கா விற்கார்கள்

துன்றுதொறாடல் உகந்த பரங்கிரிமலையும் தொலையாத சூரலை வாய்விடு சீரலைவாயும் தொழு திருவேரகமும்

நன்றுதொறாடலும் வந்தருள் செல்வி நயக்குந் திருஆவினன்குடியும் பழமுதிர்சோலைப் பழநாகமும் ஆகநெடும்

குன்றுதொறாடலும் வந்தருள் சேவக கொட்டுக சப்பாணி குறுமுனி பரவும் இலஞ்சிக் குருபர கொட்டுக சப்பாணி.


தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்

செங்கீரை  ஆடிஅருளே


கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக

கொட்டியருள் சப்பாணியே


செந்தமிழ் இலஞ்சிநகர் வந்த கந்தசுவாமி

சிறுதேர் உருட்டி அருளே

No comments: