அனுபவ ஞானம்
கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி
எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும்
அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக
வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே
மேலாக நடக்கும் தானே
வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்.
No comments:
Post a Comment