Wednesday, May 31, 2023

ஞானத்தேடல் - Ep90 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


வாகை


பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர். 


“வெற்றி வாகை சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.


‌வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்; வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி; அது வளைத்தல் ஆகும் உழிஞை-அதிரப்பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம்"


1. நிரை கவர்தல் - வெட்சி

2. நிரை மீட்டல் - கரந்தை

3. மண் கவர்தல் - வஞ்சி

4. மண் காத்தல் - காஞ்சி

5. மதில் காத்தல் - நொச்சி

6. மதில் வளைத்தல் - உழிஞை

7. போரிடல் - தும்பை

8. போரில் வெற்றி பெறுதல் - வாகை


அவை சொல்லானும் பாட்டானும் கூத்தானும் மல்லானும் சூதானும் பிறவற்றானும் வேறலாம்” -என வெற்றியைக் கொள்ளும்போர்களைக் குறித்தார். 


கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் வெல்லுநர் அணிவது வாகை யாகும்”. -  பிங்கல நிகண்டு 


மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10


மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை


வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.


மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்

குமரி வாகைக் கோலுடை நறுவீ

மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்

கான நீளிடைத் தானு நம்மொடு

ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்

நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.

- குறுந்தொகை - 347


அத்த வாகை அமலை வால் நெற்று,

அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்

கோடை தூக்கும் கானம்

செல்வாம் தோழி! நல்கினர் நமரே.

- குறுந்தொகை 369

- குடவாயிற் கீரத்தனார்

வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை, அருஞ் சுரம்'' என்ப நம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே.

- குறுந்தொகை – 39

- ஔவையார்

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15


தார் புரிந்தன்ன வாளுடை விழவின்

போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த

கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,

பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை

- பதிற்றுப்பத்து


வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை


சூடா வாகை பறந்தலை ஆடு பெற - அகம் 125/19


வாகை என்னும் ஊர் சங்ககால எயினன், நன்னன் ஆகியோர் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்


புகழா வாகை பூவின் அன்ன


வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110


புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)


வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்


கருவாகை


மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,

பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்

தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்

தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,

தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

- அகநானூறு (136)

No comments: