சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கர பந்தம்
தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த
கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த
பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க
தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே
அன்புள்ள மக்களை உடைய நாகையில், யாழ் பயிலும் அழகிய பெண்களின் தாமரை மலரைப் போன்ற கண்களை மன்மதன் அம்பினால் காதல் வயப்பட்டு நீலமலரைப் போன்ற கண்களையும் கூட ஒப்பாக கூற முடியாது
போதிவானவன்
மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க
மடமயி லியற்றக மாதிரம் புதைத்து
வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க
வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி
மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்
கன்னித் துறைவன் கனகச் சிலம்பே
வளவனின் தலைவி அகமகிழ்வோடு மலர்ந்த சோலையில் இருக்கிறாள் எவ்வாறெனில். மயில்கள் தோகை விரித்து ஆடும்போது கார்மேகம் சூழ்ந்து தேன் நிறைந்த மலர்களில் தேனீக்கள் தேன் உண்ணும், அது போல் தலைவியின் நீளமான மலர் சூடிய கரிய கூந்தல் இருந்தது
அறமே தனமாவது
No comments:
Post a Comment