Wednesday, February 08, 2023

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

No comments: