Tuesday, February 08, 2022

ஞானத்தேடல் - Ep 30 - விதியை மதியால் வெல்ல முடியுமா?(Gnanathedal)

 


விதியை மதியால் வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது பற்றி நம் முன்னோர்களும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate can it be won? Fate is believed to be what is written, let's explore what our ancestors, poets and Tamil literature have mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை, நல்வழி - Avvaiyar Moodhurai, Nallvazhi திருக்குறள் - Thirukkural தாயுமானவர் பாடல்கள் - Thayumaanavar Padalgal விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித் தம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்னருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே - தாயுமானவர் அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் - திருஞானசம்பந்தர் ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன் - ஔவையார் சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம் இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் - ஔவையார் தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி - ஔவையார் வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. - ஔவையார்

No comments: