கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர மென்றே யகில மறியத் துதிமதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குதனைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூதைந்து நாழிகையிலாறு நாழிகைதனிற் சொற் சந்தமாலை சொல்லத் துகளிலாவந் தாதியேழு நாழிகைதனிற் றொகைபட விரித்துரைக்கப் பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற் பரணியொரு நாண் முழுதுமே பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடிக் கட்டினேன் சீதஞ்செயுந் திங்கண் மரபினானீடு புகழ் செய்ய திருமலைராயன்முன் சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல் திருட்டுக் கவிப் புலவரைக் காதங்கறுத்துச் சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமீட்டேறு கவி காளமேக நானே விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும்.
No comments:
Post a Comment