குருவின் பெருமை
ஒருவருக்கு குரு (ஆசான்) என்பவரின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று இப்பதிவில் பார்ப்போம்...
The importance of Guru
Let's explore the what Tamil literature talks about the importance of Guru (Teacher) in this episode...
References
திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram
தொல்காப்பியம் - Tholkaappiyam
ஔவையார் குறள்மூலம் - Avvaiyar Kural Moolam
கந்தர் அநுபூதி - Kandhar Anuboothi
திருக்குறள் - Thirukkural
சித்தர் பாடல்கள் - Siddhar Songs
குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு.
குரு என்றால் ஒளி
'குரு' என்ற சொல் 'ஒளி' என்றும் பொருள்படும்.
அதனால் தான் கண்களில் ஒளியிழந்தவனைக் 'குருடன்' என்கிறோம்.
வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான்.
ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம்.
குரு என்றால் செம்மை
குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே
- தொல்காப்பியம் 2-8-5
இரத்தத்தைக் "குருதி" என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான்.
குரு என்றால் முளைப்பு
வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் "குருத்து" என்று சொல்வது அதன் முளைப்பை வைத்து.
எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு.
குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே
- திருமந்திரம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
- திருமந்திரம்
குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்
- ஔவையார் குறள்மூலம்
தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்
- ஔவையார் குறள்மூலம்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
- கந்தர் அநுபூதி
No comments:
Post a Comment