உடல்நலம் உயிர்நலம்
உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று இப்பதிவில் பார்ப்போம்...
Wealth called health
Let's explore the what Tamil literature talks about health in this episode...
References
திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram
திருக்குறள் - Thirukkural
சித்தர் பாடல்கள் - Siddhar Songs
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
காயமே இது மெய்யடா
அதில் கண்ணும் கருத்தும் வையடா
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
No comments:
Post a Comment