Wednesday, December 22, 2021

ஞானத்தேடல் - Ep 25 - பழமொழிகள் (Gnanathedal)


பழமொழிகள்

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் என்னும் முதுமொழிகள், இலக்கியத்தில் அவற்றின் பங்கு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Proverbs/Adages Proverbs/Adages are quite prevalent since the old times and in Tamil literature. Let's explore it in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam அகநானூறு - Aganaanooru தேவாரம் - Thevaaram ஔவையார் நல்வழி - Avvaiyar Nallvazhi அபிராமி அம்மை பதிகம் - Abirami Ammai Padhigam பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் - Thirumangai Azhwar Siriya Thirumadal திருக்குறள் - Thirukkural தொல்காப்பியர், நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி” அகநானூறு நன்று செய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் பழமொழிப் பதிகம் திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி வருமாறு அமைந்துள்ளது. நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது.  (1) மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த  மேனியான் தாள்தொ ழாதே உய்யலாம்  மென்றெண்ணி உறிதூக்கி   உழிதந்தென் உள்ளம்விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ   மயில் ஆலும் ஆரூ ரரைக் கையினால் தொழாதுஒழிந்து கனியிருக்கக்      காய்கவர்ந்தகள்வ னேனே.    இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100) (2) என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு  என்னையோர்  உருவம்  ஆக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு    என்னுள்ளம்  கோயி லாக்கி அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு    அருள்செய்த ஆரூ ரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்   காக்கைப்பின் போன வாறே.    காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு ஆராவமுதமண்கய்தி – அதில்நின்றும் வாரதொழிவதன்னுண்டு – அதுநிற்க ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே - திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் முயல் விட்டுக் காக்கை தினல் - பழமொழி நானூறு நீற்றிடைத் திகழும் நித்தனை, முத்தனை, வாக்கும் மனமும் இறந்த மறையனை, பூக்கமழ் சடையனை, புண்ணிய நாதனை, இனைய தன்மையன் என்று அறிவு அரியவன் தனை, முன் விட்டுத் தாம் மற்று நினைப்போர், மாமுயல் விட்டுக் காக்கைப் பின்போம் கலவர் போலவும் விளக்கங் கிருக்க மின்மினி கவரும் அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும் - நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம்) (3) பெருகுவித்து என்பாவத்தைப்பண்டெலாம்  குண்டர்கள்தம்  சொல்லே கேட்டு உருகுவித்து என் உள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூ ரர்தம் அருகிருக்கும் விதியின்றி அறம் இருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே.  (4) குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார் நகைநாணாது உழிதர் வேனைப்  பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில்  தெளித்துத்தன் பாதம்காட்டித்  தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல்  அருள்செய்யும் ஆரூரரைப் பண்டெலாம் அறியாதே பனிநீரால்  பாவைசெயப் பாவித் தேனே   (5) துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்  சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு என்னாகத் திரி தந்து ஈங்கு  இருகையேற்று   இடஉண்ட ஏழை யேனான் பொன்னாகத்து  அடியேனைப் புகப்பெய்து  பொருட்  படுத்த ஆரூ ரரை என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு   ஆதனாய்  அகப்பட் டேனே.  (6) பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொரு  தலையோடே திரிதர் வேனை ஒப்போட ஓதுவித்துஎன் உ ள்ளத்தின்   உள்ளிருந்து அங்கு  உறுதி காட்டி அப்போதைக்கு  அப்போதும்  அடியவர்கட்கு     ஆரமுதாம்  ஆரூ ரரை எப்போதும் நினையாதே இருட்டறையின்   மலடு கறந்து  எய்த்த வாறே.  (7) கதியொன்றும்  அறியாதே கண்ணழலத்  தலைபறித்துக் கையில்  உண்டு பதியொன்று நெடுவீதிப் பலர்காண  நகைநாணாது  உழிதர் வேற்கு மதிதந்த ஆரூரில் வார்தேனை   வாய்மடுத்துப் பருகி உய்யும் விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்க   மின்மினித்தீக் காய்ந்த வாறே.   (8) ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்   ஓரம்பின் வாயில் வீழக் கட்டானைக் காமனையும்  காலனையும்   கண்ணினெடு காலின் வீழ அட்டானை  ஆரூரில்  அம்மானை   ஆர்வச்செற் றக்கு ரோதம் தட்டானைச் சாராதே தவமிருக்க   அவஞ்செய்து தருக்கி னேனே.  (9) மறுத்தான் ஓர் வல்லரக்கன்  ஈரைந்து  முடியினொடு தோளும்  தாளும் இறுத்தானை  எழின்முளரித் தவிசின்மிசை இருந்தான்றன் தலையில்  ஒன்றை அறுத்தானை ஆரூரில்  அம்மானை  ஆலாலம்  உண்டு கண்டம் கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க  இரும்புகடித்து எய்த்த வாறே. அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய்

No comments: