Friday, December 17, 2021

ஞானத்தேடல் - Ep 24 - புலவர்கள் போட்டி - 1 (Gnanathedal)


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References விநோத ரசமஞ்சரி - Vinodha Rasamanjari ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோ டிறங்குஞ் சோணாடா! கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா! பிள்ளை மதிகண் டிப்பேதை பெரிய மதியு மிழந்தாளே! ஒட்டா மதி கெட்டாய் பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர் தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா! கொங்கர்க் கமரா பதியளித்த கோவே! ராச குலதிலகா! வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே செம்மான் கரத்தனருள் சேயா! நெடியோனை அம்மானெனப் பெற்ற வருள்வேலா - இம்மான் கரும்பிறைக்கும் வெண்பிறைக்குங் கண்ணம் பிறைக்கும் அரும்பிறைக்குங் கூந்த லணை

No comments: