Sunday, January 28, 2024

ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பாலை, முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


பாலை


சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்


குடசப்பாலை

வெட்பாலை

தீம்பாலை (தித்திப்புப் பாலை தீம்பாலை)

மலைப்பாலை

குளப்பாலை

கொடிப்பாலை

கருடப்பாலை

உலக்கைப்பாலை

ஏழிலைப்பாலை (ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை)


"பாலை நின்ற பாலை நெடுவழி" - சிறுபாணாற்றுப்படை


பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் 

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை 

- நற்றிணை


திருப்பாலைப்பந்தல் உலா என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது  ஆசிரியரின் காலிங்கராய எல்லப்ப நயினார்'


இலக்கியமும் கல்வெட்டுக்களும்

திரு. வை. சதாசிவ பண்டாரத்தார்


1. திருப்பாலைப்பந்தல் உலா

2. இறைசைப் புராணம் - திருமலை நயினார் சந்திரசேகரர்

3. ஓங்கு கோயிற் புராணம் - திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் 


திருப்பாலைப்பந்தல் - தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகா. 


திருக்கழிப்பாலை கடலூர் மாவட்டம். 


திருப்பாலைவனம் - திருவள்ளூர் மாவட்டம் -  அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். 


திருப்பாலை - மதுரை 


ஏழிலைப் பாலை 


நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13


ஏழு சுரங்களை குரல்(சட்ஜம்), துத்தம்(ரிஷபம்), கைக்கிளை(காந்தாரம்) உழை(மத்யமம்), இளி(பஞ்சமம்), விளரி(தைவதம்), தாரம்(நிஷாதம்) என்றனர்.


குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே - திவாகர நிகண்டு


வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை 

- பிங்கல நிகண்டு


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், 

உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

- காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம்


ஏழ்பெரும் பாலைகள் -  செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை


முல்லை - முல்லையாழ்  - செம்பாலை – அரிகாம்போதி

குறிஞ்சி - குறிஞ்சி யாழ் - படுமலைப் பாலை - நடபைரவி

மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை – கரகரப்பிரியா

மேற்செம்பாலை - கல்யாணி

விளரிப்பாலை - நெய்தல் யாழ் – தோடி

செவ்வழிப்பாலை – இருமத்திமதோடி

அரும்பாலை - பாலை யாழ் – சங்கராபரணம்


செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்

இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே

ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்

கூடினான், பின் பெரிது கூர்ந்து.

- கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது


விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;

முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,

பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,

ஆங்கண் அறிய உரை.


பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு

மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்

செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடம் அறிந்து, நாடு.


ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை

- பொருநராற்றுப்படை


முல்லை


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; 

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,

பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

- புறநானூறு 242


கார் புறந்தந்த நீருடை வியனுலகம்

பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை

முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!

நகுவை போலக் காட்டல்

தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?

- குறுந்தொகை 162


முல்லைப் பிராட்டி! நீயுன் 

முறுவல்கள் கொண்டு, எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்! உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை முக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறத்தமை பொய்யன்றே

No comments: