Tuesday, January 16, 2024

ஞானத்தேடல் - Ep 122 - கலித்தொகை கூறும் வாழ்வியல் - (Gnanathedal)


 கலித்தொகை கூறும் வாழ்வியல்


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,

சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த

நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்

பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:   5


ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்  10

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி   15

நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!

தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;

நின்தலை வருந்தியாள் துயரம்

சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!


தோழி கூற்று

கலித்தொகை – நெய்தல் கலி

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்


கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு


'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்

குறி எதிர்ப்பை நீரது உடைத்து.


பயன் நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி

இசைநோக்கி ஈகின்றார் ஈகை, - வயமாப்போல்

ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப!

கூலிக்குச் செய்து உண்ணுமாறு. --- பழமொழி நானூறு.


 ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும், ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்" கூறுகின்றது. அது வருமாறு....


"மாண்பு உடையாளர், கேண்மையர், தத்தம்

வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,

சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்

தீர்ந்தவர், தந்தை, தாய், குரவர்,

காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர்

ஒன்பதின்மரும் உளம் களிப்ப,

வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று ஒன்றே

கோடியாம் என மறை விளம்பும்".


"முகன் எதிர் ஒன்றும், பிரியின் மற்றுஒன்றும்

மொழிபவர், விழைவுறு தூதர்,

அகன்ற கேள்வி இலார், அருமருத்துவர்கள்,

அரும்பொருள் கவருநர், தூர்த்தர்,

புகல்அரும் தீமை புரிபவர், மல்லர்,

செருக்கினார், புன்தொழில் தீயோர்,

இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்

ஈந்திடல் பழுது என இசைப்பார்".


'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;


“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்


'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;


பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.


நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் - புறநானூறு 3


நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே - நற்றிணை289


நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே - பதிற்றுப்பத்து 63


'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்


நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப


'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;


கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்


'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்த றலை"


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி யொழுகப் படும்.


இறப்பவே தீய செயினும், தன் நாட்டார்

பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு

உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!-

ஒருவர் பொறை இருவர் நட்பு.


அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,

கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம். --- நீதிவெண்பா.


மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு,

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,

வலியும் தெறலும் அளியும் உடையோய்.. --- புறநானூறு.


No comments: