Thursday, January 04, 2024

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தில்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


தில்லை


தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். 


முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர்

சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும்

பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள்

கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. 

- தனிப்பாடல் திரட்டு 


குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி

தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3


தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131


கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.


புறநானூறு - 252. அவனே இவன்!


கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த

நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்

பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

- கலித்தொகை 133


நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்

பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி

மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93


வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்

கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த

பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94


திருக்கோவையார்


திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.


இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது:

‘மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்கநூற்களுள் ஒன்று அன்று. எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கேயுண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூல்களில் பெரும் பயிற்சி உடையார்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்’


திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ

மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’.


சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’.


காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் 

ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்

ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71


மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் 

றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன்

சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த

தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ.

- திருவிளையாடற் புராணம்


ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் 

காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

No comments: