சித்திரக்கவி - சருப்பதோபத்திரம்
மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா
விளக்கம்: பெரியவனே, நீதி உடையவனே, வற்றாத செல்வம் உடையவனே. நீ என்னுள் இருப்பின் கிடைக்காதது என்ன, வேறு என்ன தேவை. நீ இராமனைப் போன்றவன், மன்மதனைப் போன்றவனும் ஆவாய். நீ மேகங்கள் போல வளம் தருபவன். ஆதலால் நீ அணிந்திருக்கும் மலர்மாலை போல உன் நெஞ்சத்தில் எங்களுக்கும் இடம் அருள்வாய்.
No comments:
Post a Comment