Saturday, March 25, 2023

ஞானத்தேடல் - Ep 78 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

………… கடிகமழ் கலிமாத்


வெட்சி


வெட்சி புனையும் வேளே போற்றி 

உயரகிரி கனக சபைக்கோர் அரசே


என்று கந்த சஷ்டிக் கவசத்தின் இறுதியில் வருகிறது.


செய்யன்....கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்" 


என்று திருமுருகாற்றுப் படை கூறுகின்றது.


வட்கர் போகிய வளரிளம் போந்தை

உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு

வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்

சுரியிரும் பித்தை பொலியச் சூடி


என்று புறநானூறு சொல்கிறது.


இதல முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி

என்று உவமை காட்டிப் பேசுகிறது.


ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்

என்று பரிபாடல் சுட்டுகிறது.


திருமுருகாற்றுப்படை,


செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு

(வரி 21 )என்று குறிப்பிடுகிறது.


எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார்ப், புரிமலர்த்

துழாஅய் மேவல் மார்பினோய்” 

என்று பரிபாடல்  (13 : 59 – 60) பாடுகிறது.


வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற்

செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு

மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ

போர்க்குத் துடியொடு புக்கு

- பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு, 1236


செங்கோடுவேரி


வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியன மணங்கமழும் வேர்கள். இவற்றை வேரி என்பர். இவைபோன்று மனக்கும் வேர்கொண்ட ஒரு மரத்தின் பூ, "கோடு வேரி" எனப்பட்டது.  i


சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,

மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,

பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று

இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி

- சிலப்பதிகாரம்


செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்


காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள்

- சிலப்பதிகாரம்


My Books


Ancient Wisdom Explored - Part 1  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5  


Ancient Wisdom Explored - Part 2  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6


#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #செங்கொடுவேரி #வெட்சி #கபிலர் #திருமுருகாற்றுப்படை #பரிபாடல்  #சிலப்பதிகாரம்  #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #vetchi #senkoduveri #paripadal #silappathikaram #thirumurugatruppadai #purathiratu #nature


For enquiries/feedback: gnanathedal@outlook.com

No comments: