Monday, August 01, 2022

ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal)

 


கோபம் தவிர் கோபம் பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது தவிர்க்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Poverty Let's explore about what Tamil literature says about anger and the ways to manage it in this episode References ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே - விவேக சிந்தாமணி வெகுளாமை அதிகாரம் செல்லிடத்துக் காப்பான் சீனங்காப்பான் அல்லிடத்து காக்கின் என்ன காவாக்கால் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - அதிகாரம்:இன்னா செய்யாமை அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் - அதிகாரம்:அறன் வலியுறுத்தல் காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் - அதிகாரம்:மெய்யுணர்தல் ஆறுவது சினம் – ஆத்திச்சூடி கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - மூதுரை நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம் - நாலடியார் வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே (2303) - திருமந்திரம் உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு? - நன்னெறி, சிவப்பிரகாச சுவாமிகள்

No comments: