Thursday, August 18, 2022

ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal)

 


பதார்த்த குண சிந்தாமணி

தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Theraiyar has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References சுட்ட நீர் நெஞ்செரிப்பு நெற்றிவவி நீங்காப் புளியேப்பம் வஞ்சமுற வந்த வயிற்றினோய் விஞ்சியே வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர் ஆழாக்குட் கொள்ளவறும். கால்கூறு, அரைக்கூறு, காய்ந்த வெந்நீரின் குணம் காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போ மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரால் - மேற்கூறும் வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு ரோகம்போ மோடி யொளித்து, முக்காற்கூறு காய்ந்த வெந்நீரின் குணம் முப்பங்கறக் காய்ந்த முத்தவெந்நீ ரால்வாதஞ் செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெங் கைப்பலநோய் வாதபித்த மையமிவை மாறுஞ் சுரிகுழலே பூதலத்து நாளும்புகல் விளாங்கனி எப்போது மெய்க்கிதமா மீளையிருமல்‌ கபமும்‌ வெப்பாகுந்‌ தாகமும்போ மெய்ப்பசியா மிப்புவியி லென்றாகிலும்‌ கனிமே லிச்சைவைத்‌துத்‌ தின்னவெண்ணித்‌ தின்றால்‌ விளாங்கனியை தின்‌. மணத்தக்காளி காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபிணியோர்க் காகும் மணத்தக்கா ளிக்குள்ள வாறு. கிழங்கான் மீன் பத்தியத்திற் கேற்ற பருங்கிழங்கான் மீன்அருந்த உற்ற பிணியனைத்தும் ஒடுங்காண்-மெத்தப் பசியெழும்புஞ் சேர்ந்த பழமலமுஞ் சாறும் முசியா துடல்வளரு முன்


No comments: