வறுமை நீங்க
வறுமை பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது நீங்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...
Poverty
Let's explore about what Tamil literature says about poverty and the means to get out of it in this episode
References
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிதே இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங் கொடிதே அன்பில்லாப் பெண்டிர்
அதனினுங் கொடிதே
இன்புற அவள் கையில் உண்பது தானே!
- ஔவையார்
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே
- விவேக சிந்தாமணி
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
- ஔவையார்
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே
கந்தர் அநுபூதி
19 (வறுமையை நீக்கி அருள்வாய்)
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று
துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே-ஆணைவழி நடப்பேன்
No comments:
Post a Comment