Saturday, July 01, 2023

ஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை 

தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Flowers in Kurinji Paatu

Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji

References

குறிஞ்சிப் பாட்டு

‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

குடசம்

.குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
- சிலப்பதிகாரம் 

கரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு

வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும்
காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப்
பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம்
இங்குக் குடசப் பாலைக்கே”
- அகத்தியர் குணபாடம்

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை

எருவை

வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .[219 - 224]
மலைபடுகடாம்

கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை
எருவை கோப்ப எழில் அணி திருவில்
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்
கூனி வளைத்த சுனை
- பரிபாடல்

எருவை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘பஞ்சாய்க்கோரை’ என்றும் ‘கொறுக்கச்சியுமாம்’ என்றும் உரை கண்டார்

எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261
எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை - பரிபாடல் 19-77

பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
-  குறுந்தொகை 170

கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269

ஐங்குறுநூறு -  வேழப் பத்து

மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே.

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே.

பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே

கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே.

மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.

ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.

புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
.புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.

இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.

No comments: