குமரேச சதகம் குமரமலை, குமரேச சதகம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Kumaresa Sadhagam Let's explore about Kumara Malai and Kumaresa Sadhagam in this episode References குமரேச சதகம் முருகன் திருவிளையாடல் பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும், புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும் பாதனைச் சிறையில் வைத்தும், தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும் செகுக்கமுடி யாஅசுரனைத் தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு செய்தமரர் சிறைதவிர்த்தும், நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில் நினைக்குமுன் வந்துதவியும், நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை நிகரான தெய்வமுண்டோ மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி மார்பனே! வள்ளிகணவா! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (1) பலர்க்கும் பயன்படுவன கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய கோவுமூ ருணியின் நீரும் கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும், குடியாளர் விவசாயமும், கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற் கனிபல பழுத்தமரமும், கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும் காவேரி போலூற்றமும், விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும், வீசும்மா ருதசீதமும், விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும் வெகுசனர்க்கு பகாரமாம், வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப மார்பனே வடிவேலவா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே. (16)
No comments:
Post a Comment