Saturday, March 12, 2022

ஞானத்தேடல் - Ep 36 - மலரின் பருவங்கள் (Gnanathedal)


 மலரின் பருவங்கள்

மலர்கள் பற்றி கூறாத இலக்கியங்கள் இல்லை எனலாம். இறையை வணங்கும் போதும், காதல் அறிவிக்கும் போதும், மென்மையை குறிப்பிடும் போதும் மலர்களோடு ஒப்புமை செய்யப்படும். ஆனால் மலர்களுக்கு பருவங்கள் வகுத்து, அந்த பருவங்களுக்கு பெயரும் கொடுத்துள்ளது நம் இலக்கியங்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of a flower Flowers are described in almost all Tamil literature. Flowers are used to worship of the Gods, to express love and to compare with softness. However, our literature has classified different stages of a flower and also named each stage, let's explore that in this episode... References குறுந்தொகை - Kurunthokai அகநானூறு - Aganaanooru திருவாசகம் - Thiruvaasagam திருக்குறள் - Thirukkural ## குறுந்தொகை கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. ## பூக்கும் பருவத்தின்  முதல் நிலை - அரும்பு மொக்குவிடும் நிலை - மொட்டு  முகிழ்க்கும் நிலை- முகை பூவாகும்  நிலை - மலர் மலர்ந்த இதழ் விரிந்த நிலை - அலர் வாடும் நிலை - வீ வதங்கிக் கிடக்கும் நிலை - செம்மல் அரும்பு ,நனை ,முகை, மொக்குள்,  முகில், மொட்டு,போது, மலர் , பூ  , வீ ,   பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள். அரும்பு - அரும்பும் நிலை நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை  முகை - தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில மொக்குள் - பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம்   அதாவது மணம் பெறும் நிலை. மொக்குள் பருவத்தில்தான் பூவில் மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும். முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ். போது  - மொட்டு மலரும்போது ஏற்படும் புடைப்பு நிலை மலர் - மலரும்  பூ அதாவது மலர்ந்த நிலை பூ - முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர் வீ  - உதிரும்  நிலையில் இருக்கும் பூ பொதும்பர் - பூக்கள்  பூத்துக்குலுங்கி நிற்கும் நிலை பொதும்பர்  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ செம்மல் - உதிர்ந்த பழம் பூ ## அகநானூறு புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை சுரிமுகிழ் முசுண்டைப் பொதியவிழ் வான்பூ # திருவாசகம் தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே ## திருக்குறள் காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் முகைமொக்குள் உள்ள  நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

No comments: