Saturday, March 12, 2022

ஞானத்தேடல் - Ep 35 - பஞ்சபூதங்களும் இலக்கியமும் (Gnanathedal)

 


பஞ்சபூதங்களும் இலக்கியமும் உலக இயக்கத்தின் முக்கிய பங்கு பஞ்சபூதங்களுக்கு உண்டு. உலகையும் இயக்கி புலவர்களையும் இயக்கி இலக்கியதில் இடம் பெற்று உலகமக்களாலும் வழிபடப் பெற்று விளங்கும் பஞ்சபூதங்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... The Five Elements of Nature and Tamil Literature The Five elements of nature are important for the functioning of life in this planet. They direct the poets' thoughts and takes a place in the literature and is also worshipped by the people. Let's see about what literature says about the five elements of nature in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam புறநானூறு - Puranaanooru பரிபாடல் - Paripaadal நாலாயிர திவ்ய பிரபந்தம் - Naalayira Dhivya Prabandham (Thirumazhisai Azhwar Thiruchandha Viruththam) அகம் புற ஆராய்ச்சி விளக்கம் - Agam Puram Aaraachi Vilakkam குறள்மூலம் Avvaiyar Kural Moolam திருவாசகம் - Thiruvaasagam - Pottri Thiruagaval அபிராமி அந்தாதி - Abirami Andhadhi திருக்குறள் - Thirukkural நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் -  தொல்காப்பியம் மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய் - புறநானூறு பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடு போர் அண்ணால்! அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; முந்தியாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே, இரண்டின் உணரும் வளியும் நீயே, மூன்றின் உணரும் தீயும் நீயே, நான்கின் உணரும் நீரும் நீயே, ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே. அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்! - பரிபாடல் நல்லெழுதியார் பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே? - திருமழிசைப்பிரான் திருச்சந்த விருத்தம் நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண் (5) - ஔவையார் குறள்மூலம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - போற்றித் திருஅகவல் திருவாசகம் பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே. - அபிராமி அந்தாதி திருக்குறளும் பஞ்சபூதம் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்  வகைதெரிவான் கட்டே யுலகு (27) - திருக்குறள் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

No comments: