Thursday, September 21, 2023

ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


குருகிலை


‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். 


அஞ்சனம் காயா மலர குருகிலை

ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்”

தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர்

வந்தார் திகழ்நின் தோள்.


- திணைமொழி ஐம்பது (21)


அருவி அதிரக் குருகிலை பூப்பத்

தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற

வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்

பெரிய மலர்ந்த(து)இக் கார்.

- திணைமொழி ஐம்பது (30)


முருகியம்போல் வானம் முழங்கி இரங்க

குருகிலை பூத்தன கானம்.... ....”

கார் நாற்பது 27


குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்


இது முல்லை நிலத்தது .

இது கார் காலத்தில் பூப்பது

இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.


மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்

நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய

முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

- நான்மணிக்கடிகை



மருதம்


கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். (மருது பாண்டியர்கள்)

Pride of India (இந்தியாவின் பெருமை)

சிங்களத்திலும் இதை ‘மருது’ என்றே அழைக்கின்றனர்.


Queen’s Flower (அரசிக்கு உகந்த பூ)

உழவர்க்கு நிழல்


………………………..ஓங்கிய

பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,

மருதமர நிழல், எருதொடு வதியும்

அகநானூறு (37)


நாகதெய்வக் கோயில்

மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.


பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் 

- பெரும்பாணாற்றுப்படை 232


மருத மாலை


பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28


“பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”

- நற்றிணை வரிகள் (350:2-3)


சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.


திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83

தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45

திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை


வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,

திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36


மருதூா்கள்


மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது.


தலைமருது - வட மருதூா் என்று வழங்கப்படுகிற ஸ்ரீ சைலம்

இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்

கடைமருது - திருநெல்வேலி பொருநைக் கரையின் திருப்புடை மருதூா்


மருத மரங்கள் நிறைந்த பகுதி மருதூா் ஆனது.


10) மதுரை


மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது.


செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்

துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50


மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்

மணல் மலி பெருந் துறைத்….. - பதிற்றுப்பத்து - 23


…………… காவிரிப்

பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த

ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை

குறுந்தொகை 258


11) மருத்துவ மரம்


ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்

காதமென வோடக் கடத்துங்காண் - போத

மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்

தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி


12) மருதமலை


கச்சியப்பர் பேரூர்ப் புராணத்திலும் "மருதமலை" பற்றி பாடியுள்ளார். (அபயப்படலம், மருதவரைப்படலம்)


முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்

உருகு மன்பர்க் குதவி செய்யவே

பெருகு காமர்ப் பிறங்க லாயினான்

அருகின் வேலு மருத மாயதே.


மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்

மருதம் பாட வாய்ந்த வேள்வரை

மருத நின்ற மறுவில் காடிசியான்

மருத வோங்அ லென்ன மன்னுமே.


பாம்பாட்டிச் சித்தர்


கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே

கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்

கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே


மருதையாறு, மருதப்பண்


குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட அகவர்

நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்

– பொருநராற்றுப்படை  (218-221)


Tuesday, September 19, 2023

ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)


 திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம்


திகட சக்கரச் செம்முக மைந்துளான்

     சகட சக்கரத் தாமரை நாயகன்

          அகட சக்கர வின்மணி யாவுறை

               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


வேம்பத்தூராருள்‌ ஒருவராகிய பெருமாளையர்


நெல்லைவருக்கக்கோவை என்னும்‌. பிரபந்தத்தை இயற்றி முடித்தார்‌. மொழிக்கு முதலாகும்‌ உயிரெழுத்துக்களிலும்‌ உயிர்‌

மெய்யெழுத்துக்களிலும்‌ ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின்‌ முதலில்‌ முறையே வரும்படி. அகப்‌பொருட்டுறைகளைாக  அமைத்துப்பாடுவது வருக்கக்‌கோவையாகும்‌. பாம்பலங்காரர்‌ வருக்கக்கோவை, மாறன்‌ வருக்கக்கோவை


தேரோடும்‌ வீதியேலாஞ்‌ செங்கயலுஞ்‌ சங்கினமும்‌

நீரோ டூலாவிவரும்‌ நெல்லையே - காரோடும்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ கந்தரத்த ரந்தரத்தர்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ காப்பு


இச்‌ செய்யுளின்‌ பிற்பகுதியின்‌ பொருள்‌ வருமாறு :--


காரரோடும்‌-கருநிறம்‌ பரவிய, ,

கந்தரத்தர்‌- திருக்கழுத்தை யுடையவரும்‌

அந்தரத்தர்‌- ஞானாகாயத்தையே இருமேனியாகச்‌கொண்டவரும்‌

கந்து அரத்தர்‌ - பற்றுக்கோடாசிய செம்மைநிறமுடையவரும்‌,

அம்‌ தரத்தர்‌ - திருமுடியில்‌ நீரைத்‌ தாங்கியவரும்‌,

கந்தர்‌ அத்தர்‌ - முருகக்கடவுளின்‌ தந்தையாரும்‌,

அம்‌ தரத்தர்‌- அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான்‌

காப்பு- காவல்‌ புரிந்து வீற்றிருக்கும்‌ இடம்‌

அந்தரம்‌-ஆகாயம்‌

கந்து - பற்றுக்கோடு

அரத்தம்‌- சிவப்பு;,

அம்‌- நீர்‌, அழகு;

தரம்‌- தகுதி.


Saturday, September 09, 2023

ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)

 

கம்பர் கட்டிய சுவர்


சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம்


கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம்


“தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை”


தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை


போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே.


மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


"இவ்வுலகில் மன்னவனாக இருப்பவள் நீ ஒருவன் தானோ வளமான நாடாக இருப்பதும் நின் சோணாடு மட்டுந்தானோ. உன்னை அறிந்ததன் பின்போ யாள் தமிழினைக் கற்றுணர்ந்தேன. குரங்கு தாவினால் அதனைத் தாங்காது போகும் மரக்கொய் யாதும் உண்டோ? இல்லையன்றே! அங்ஙனமே, யான் இங்கிருந்தும் அகன்றால், என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்தனும் உண்டாமோ?" என்பது பாடலின் பொருள்.


"அங்ஙனம் எவன்தான் ஆதரிக்கிறான் என்று பார்க்கலாம என்று குலோத்துங்கன் சீறினான். கம்பரின் சீற்றமும் அதனால் மிகுதியாயிற்று. தாம் இருப்பது சோழனின் அவை என்பதையும் அவர் மறந்தனர். அவன் ஆதரவில் தாம் இருந்ததையும் மறந்தனர். தம்மை அவமதித்த சோழனின் செயலே அவர்முன் நின்றது. கவியுள்ளம் பொங்கியது. தமிழால் நிறைந்த கம்பரின் நெஞ்ச திலே தணல் மூண்டது. இனிமை சேர்த்துப் பிறரை மகிழ்விக்கும கவிதையிலே சினத்தீ சொல்லுக்குச் சொல் வெளிப்பட்டது. கம்பரின் குரலும் அதற்கேற்ப உயர்ந்தது. அதன் கடுமையும் அவையினரைத் திகைப்படையச் செய்தது.


மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ!

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


என மீண்டும் பாடினார்.


குரங்குகள் கிளைகளிலே ஆளந்தமாகத் தாவிச் செல்லும் இந்தக கொம்புதான் குரங்கைத் தாங்கும். இது தாங்காது என்பதில்லை. தம்மை அடைந்த குரங்குகளை எல்லாக் கொம்புகளுமே தாங்கத்தான் செய்யும். ஆகவே, குரங்கு ஒன்றுக்கு இந்தக் கொம்பை விட்டுப் போகி றோமே? இனித் தாங்குவது எதுவோ? என்ற கவலையே கிடையாது. காடெல்லாம் மரங்கள். அந்த மரங்களின் கிளைகளுள் எதுவுமே அதனைத் தாங்கும்.


வேந்தரும் பிறகும் தன்னைப் போற்றி வழிபட்டு நிற்கப் பெரும் நதியோடு திகழும் தள்ளைக், கம்பர், பாடிப் பரிசில் பெற்றே நிலையினர் பழித்ததைக் கேடக நேர்ந்தது பற்றி அவன் எழுதினாள். என்றும், அவனுடைய எதிரேயே அங்கனம் எதிர்ப் இச்சுப் பேசினார் எவரும் அல்லர் என்பதனை நினைந்தபோது, ஆத்திரம் மேலும் பெரிதாயிற்று.


திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் நினைவு கூனுக்கு அப்போது வந்தது."


'கம்பரே! என்னை விட்டால் சடையப்பரின் ஆதரவு இருக்கிறதென்ற செருக்குத்தானே உம்மை இப்படிப் பேச வைத்தது. சடையப்பர் என் ஆணைக்கு உடபடடவர். அவர்க்கு இப்போதே தகவல் தெரிவித்து விடுகின்றேன். அவரிடமிருந்து சிறு உதவியும் இனிக் கிடையாதபடி செய்து விடுகின்றேன்" என்றான்.


சோழவின் பேச்சைக் கேட்டதும், கம்பரின் ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. வெண்ணெய்ச் சடையப்பரிடத்திலே கம்பருக்கு அளவுகடந்த பெருமதிப்பு உண்டு எனினும், சோழனின் பேச்சு. அவரைச் சிந்திக்கவும் வைத்தது.


காதம் இருபத்துநான் கொழியக் காசினியை

ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில்

கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீ முனையில்

இல்லையோ எங்கட்கு இடம்?


மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து

சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே

விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே