குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம்
தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Flowers in Kurinji Paatu
Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers
References
குறிஞ்சிப் பாட்டு
. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
குருகிலை
‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.
அஞ்சனம் காயா மலர குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்”
தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள்.
- திணைமொழி ஐம்பது (21)
அருவி அதிரக் குருகிலை பூப்பத்
தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்த(து)இக் கார்.
- திணைமொழி ஐம்பது (30)
முருகியம்போல் வானம் முழங்கி இரங்க
குருகிலை பூத்தன கானம்.... ....”
கார் நாற்பது 27
குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்
இது முல்லை நிலத்தது .
இது கார் காலத்தில் பூப்பது
இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.
- நான்மணிக்கடிகை
மருதம்
கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். (மருது பாண்டியர்கள்)
Pride of India (இந்தியாவின் பெருமை)
சிங்களத்திலும் இதை ‘மருது’ என்றே அழைக்கின்றனர்.
Queen’s Flower (அரசிக்கு உகந்த பூ)
உழவர்க்கு நிழல்
………………………..ஓங்கிய
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
அகநானூறு (37)
நாகதெய்வக் கோயில்
மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம்
- பெரும்பாணாற்றுப்படை 232
மருத மாலை
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28
“பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”
- நற்றிணை வரிகள் (350:2-3)
சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.
திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83
தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45
திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36
மருதூா்கள்
மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது.
தலைமருது - வட மருதூா் என்று வழங்கப்படுகிற ஸ்ரீ சைலம்
இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்
கடைமருது - திருநெல்வேலி பொருநைக் கரையின் திருப்புடை மருதூா்
மருத மரங்கள் நிறைந்த பகுதி மருதூா் ஆனது.
10) மதுரை
மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது.
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத்….. - பதிற்றுப்பத்து - 23
…………… காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை
குறுந்தொகை 258
11) மருத்துவ மரம்
ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்
காதமென வோடக் கடத்துங்காண் - போத
மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்
தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
12) மருதமலை
கச்சியப்பர் பேரூர்ப் புராணத்திலும் "மருதமலை" பற்றி பாடியுள்ளார். (அபயப்படலம், மருதவரைப்படலம்)
முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்
உருகு மன்பர்க் குதவி செய்யவே
பெருகு காமர்ப் பிறங்க லாயினான்
அருகின் வேலு மருத மாயதே.
மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்
மருதம் பாட வாய்ந்த வேள்வரை
மருத நின்ற மறுவில் காடிசியான்
மருத வோங்அ லென்ன மன்னுமே.
பாம்பாட்டிச் சித்தர்
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே
கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்
கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே
மருதையாறு, மருதப்பண்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர்
நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்
– பொருநராற்றுப்படை (218-221)