நிரோட்டகம் - அநாசிக இதழகல் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்
தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன. அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி என்பன. அதில் நிரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது. அநாசிக எழுத்துக்கள்: க, ச, ட, த, ப, ற, ய, ர, ல, வ, ள, ழ, ஆகியவை.
பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள்.
கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.
இந்த அநாசிக எழுத்துக்களை கொண்டு ஒரு இதழகல் பாடல் பாடுவது என்பது மிக கடினமான ஒன்று. அதை மாம்பழ கவிச்சிங்க நாவலர் பத்து நிமிடத்தில் பாடினார் என்பது மேலும் ஆச்சரியமூட்டும் செய்தி.
இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்ட யமக அந்தாதி வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....
அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள
அலக கசடது அடர் அளம் கட
கல் அக சய சக தட - சலச
தரள சர தத ரத ததல
கரள சரள கள
Nirotagam Anaasiga Idhazhagal - Songs in which the lips don't meet
Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal.
Tamil language has nasals and non-nasals in its alphabets. Singing a poem that is an Idhazhagal, that too using only the non-nasals is an amazing task. The poet Mambazha Kavichchinga Naavalar wrote such a poem in 10 minutes.
Works like these enrich the Tamil language. In this episode let's explore that Nirotagam...