Sunday, February 12, 2023

ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal)


 காலக்கணக்கு

2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 

 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை

 2 மாத்திரை கொண்டது - குரு 

 2 குரு கொண்டது - உயிர் 

 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 

12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 

60 விநாடி கொண்டது - நாழிகை

 7.5 நாழிகை கொண்டது - சாமம்

 4 சாமம் கொண்டது - பொழுது 

 2 பொழுது கொண்டது - நாள்

30 நாள் கொண்டது - மாதம்

12 மாதம் கொண்டது - வருஷம். 


யுகங்கட்கு ஆண்டு அறிதல்


இருநூற் றொருபதுடன் ஆறா யிரத்தை 

இருநால் இருமூன்றின் நாலில் - நிருமித்த 

பின்னிரண்டு தன்னில் பெருக்கில் திருமாதே 

நண்ணுமொரு நாலுகத்தின் சீர்


உரை: அழகிய திருமகளுக்கு ஒப்பானவளே! கிரேதாயுகம், திரேதாயுகம். துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் ஆண்டுகள் எவ்வளவு எனின். இருநூற்றுப் பதினாறாயிரத்தை (உாகயசுசூ) எட்டிலும் ஆறிலும் நாலிலும் இரண்டிலும் பெருக்க, எட்டில் பெருக்கிய பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம் கிரேதாயுகத்து ஆண்டு எனவும். ஆறில் பெருக்க, பன்னிரண்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஆறாயிரம் திரோதாயுகத்து ஆண்டு எனவும். நான்கில் பெருக்க எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் துவாபரயுகத்து ஆண்டு எனவும். இரண்டில் பெருக்க நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் கலியுக ஆண்டு எனவும். இந்த நான்கு யுகமுங்கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்: இஃதொரு சதுர்யுகம் என்று சொல்லப்படும்.

தேவகாலம் அறிதல்


எண்ணுஞ் சதுர்யுகமீ ராயிரங் கூடில் 

நண்ணுஞ் சதுர்முகத்தோன் நாளாகும் பெண்ணணங்கே

ஐயாறு திங்களே ஆறிரண்டும் ஆனதே 

பொய்யாத நூறும் புகும்.


உரை : திருமகளுக்கு ஒப்பானவளே! மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது நான்முகனுக்குப் பேராயுள். இந்தப் பேராயில் நூறு (m) சென்றால் ஆதிநான்முகனுக்கு யுகம் முடிவு.

நான்கு யுகமுங் கூடின ஆண்டு நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதாயிரம் இது மகாயுகம் என்று சொல்லப்படும். இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு அரசாட்சி: இந்த மனுவுக்கு அரசாட்சி எழுபத்து நான்கு சென்றால் இந்திரனுக்கு அரசாட்சி. இந்திரனுக்கு இந்த அரசாட்சி இருநூற்று எழுபது சென்றால் நான்முகனுக்கு ஒருநாள் இந்நாள் முப்பது சென்றால் ஒரு திங்கள்: இத்திங்கள் பன்னிரண்டு சென்றால் ஓர் ஆண்டு. இந்த ஆண்டு நூறு சென்றால் நான்முகனுக்கு வாணாள் முடிவு. இவ்வாறு முந்நூற்று அறுபது சென்றால் ஆதிநான்முகனுக்குப் பிரளய காலம் பிரளய காலம் நூறு சென்றால் திருமாலுக்கு ஒரு கற்பம் இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு மயிர் உதிரும். இந்த உரோமச மகா இருடிக்குப் பத்துக்கோடி மயிர் உதிர்ந்தால். மீனச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு செதிள் உதிரும். இவ்வாறு மீனச மகாஇருடிக்கு ஒரு கோடி செதிள் உதிர்ந்தால் பரத்துவாச மகாஇருடிக்கு ஒரு நிமிடம். இந்தப் பரத்துவாச மகாஇருடிக்கு இவ்வாறு முப்பது கோடி சென்றால் மகாசத்தி தலைமயிர் அவிழ்த்து முடிப்பாள். இவ்வாறு எழுநூற்று எண்பதுகோடி சத்திகள் தலைமயிர் அவிழ்த்து முடித்தால். இறைவனுக்கு அண்மையில் இருக்கின்ற உருத்திரமாகாளிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லப்பெறும்.

ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - சுழிகுளம்


கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா

முயல்வ துறுநர்

திருவ ழிந்துமாயா


செய்யுளால் முதிர்ந்தார் செய்யும் செய்யுளே விலையிடுதற்கரிய செய்யுளெனவும், இடைவிடாது முயல்வார் செல்வமழிந்து கெடாதெனவு மாம்.


மதந  விராகா வாமா

தநத  சகாவே நீவா

நதத நதாதா வேகா

விசந விரோதா காரா


மதனா! அவா இல்லாதவனே! ஒளியை உடைய வனே! குபேரனுக்கு நண்பனாகவுள்ளானே! முகிலினுமதிகமான வள்ளலே! பாம்பணியால் விரோதமான தோற்றத்தையுடையவனே! எங்கள் வருத்தங்களை நீக்கிக் காப்பாயாக!

Wednesday, February 08, 2023

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

ஞானத்தேடல் - Ep 71 - சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கரபந்தம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கர பந்தம்


தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த

கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த

பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க

தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே


அன்புள்ள மக்களை உடைய நாகையில், யாழ் பயிலும் அழகிய பெண்களின் தாமரை மலரைப் போன்ற கண்களை மன்மதன் அம்பினால் காதல் வயப்பட்டு நீலமலரைப் போன்ற கண்களையும் கூட ஒப்பாக  கூற முடியாது


போதிவானவன்


மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க

மடமயி லியற்றக மாதிரம் புதைத்து

வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க

வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி

மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்

கன்னித் துறைவன் கனகச் சிலம்பே


வளவனின் தலைவி அகமகிழ்வோடு மலர்ந்த சோலையில் இருக்கிறாள் எவ்வாறெனில். மயில்கள் தோகை விரித்து ஆடும்போது கார்மேகம் சூழ்ந்து தேன் நிறைந்த மலர்களில் தேனீக்கள் தேன் உண்ணும், அது போல் தலைவியின் நீளமான மலர் சூடிய கரிய கூந்தல் இருந்தது


அறமே தனமாவது 

Saturday, January 21, 2023

ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


அனிச்சம்


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும்விருந்து” (குறள் 90)              

                                                              

முகம் பாதி பண்டம் பாதி 


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்  (குறள் 1111)                                                         


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்    (குறள் 1120)                                                           


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை  (குறள் 1115)                                                           


கலித்தொகை

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்

புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த

தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்

பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின்

இன்று நன்று, என்னை அணி  - 91 : 1-5


குறிஞ்சி


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 

- தேவகுலத்தார் (குறுந்தொகை)


நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 

பாவை அன்ன வனப்பினள் இவள்' என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை-

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. 

- பாண்டியன் மாறன் வழுதி (நற்றிணை 301)


சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் 

காதல் செய்தவும் காதலன்மை

யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. 

வெறி பாடிய காமக்கண்ணியார் (நற்றிணை 268)


குறிஞ்சி பூங்கோதை போலும் குங்கும முலையினாள்

- சீவக சிந்தாமணி


கொய்யாக் குறிஞ்சி பலபாடி - புறப்பொருள் வெண்பாமாலை


ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் ஆம்பல், குவளை பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Aambal and Kuvalai


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70


விரிமல ராவிரை வேரல் சூரல்

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி

குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்

தில்லை பாலை கல்லிவர் முல்லை

குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்

வாழை வள்ளி நீணறு நெய்த

றாழை தளவ முட்டாட் டாமரை       80


ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி

சேடல் செம்மல் சிறுசெங் குரலி

கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை

யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி

வஞ்சி பித்திகம் சிந் துவாரம்

தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி       90


நந்தி நறவ நறும்புன் னாகம்

பாரம் பீரம் பைங்குருக் கத்தி

யாரங் காழ்வை கடியிரும் புன்னை

நரந்த நாக நள்ளிரு ணாறி

மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

மாலங் குடைய மலிவன மறுகி

வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்

வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்


1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்


மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர் - கலித்தொகை 


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங்குறுநூறு


கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற


அள்ளற் பழனத்து அரக்காம்பல்  வாய்நெகிழ

வெள்ளம் தீப்பட்டதென வெருவி - புள்ளினம்

தன் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்     

- முத்தொள்ளாயிரம்


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம் 


ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - குறுந்தொகை


கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை - அகநானூறு

குவளை யுண்கண் இவளும் நம்மொடு  வரூஉம்  - அகநானூறு


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் ……

- திருவெம்பாவை

Saturday, January 14, 2023

ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 2 (திருமூலர்) - (Gnanathedal)

 

தமிழும் அறிவியலும் - 2


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 2


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


திருமூலர் சொல்லும் செல் அளவு


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிர மாயினால்

ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.


நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே