Sunday, November 27, 2022

ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 (ஆண்டாள் மழை வானியல்) - (Gnanathedal)


தமிழும் அறிவியலும் - 1


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 1


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


ஆண்டாள் பாசுரம்


ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் 

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


ஞானத்தேடல் - Ep 64 - சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - (Gnanathedal)


 சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம்


- சதுர் நாகபந்தம் 


தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங 

னறித லுலகியலை – முன்னுவந்துன்னை யறிக முதல்.


நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ

நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை


ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு

தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ


உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண்

மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல்


மேலா பகவா குகனே வெகுகன 

வேலா வவாவை வெலுகவே - கோலா 

கலாப சுகனேகா வாயே கதிசேர் 

கலாப மயில்வா கனா!


- அஷ்ட நாகபந்தம் 


சீதரா பாற்கரா சீல நிறையாளா 

சேது பதியான சீரைய- போதப் 

பகவனக லாதமா பாங்கினக நேய 

சகல பயனுந்தா தா.


Saturday, November 12, 2022

ஞானத்தேடல் - Ep 63 - சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் - (Gnanathedal)

 

சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் திருவாவடுதுறையில் பிள்ளையார் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டி விண்ணப்பித்தார். தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடிய மகனின் பக்தியை மெச்சி இறைவனும் உலவாக்கிழி (குறைவற்ற பொற்கிழி) ஒன்றை அருளினார். அந்தப் பொற்கிழியை நன்றியுடன் பெற்றுக் கொண்ட சிவபாத இருதயர் தமது யாகங்களை இனிதே நடத்தினார். இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

ஞானத்தேடல் - Ep 62 - சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலதா யும்பர் தெருளின் மருவாசீர்ச் சீரே பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு குன்றே தெருள வருள் அறத்தினது அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள் அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழை யுடையாய்! குற்றமில்லாத ஏகரூபத்தை யுடையால்! உமையோடு பொருந்தின மலை போல்வாய்! யாங்கள் தெளிய அறிவை அருள் வாயாக. மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதித் திருநிலா வானஞ் சுருங்கு மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி அடைந்தவருள்ளத்தே கெடாத விளக்கமாயுள்ளாய்! நஞ்சின்கணுண்டாகிய பெருகிய நிற நிறைந்து பொருந்தின திருமிடற்றையுடைய பெரிய சோதியாயுள்ளாய்! அழகிய மதியை யுடைய ஆகாயமானது சிறுகப் பெருகிய வொளியே திருமேனியா யுள்ளாய். எனதுள்ளம் நினதடியை மறக்கு மெல்லையை யொழிப் பாயாக. மொத்தம் - 118 சுருங்கியது - 96 தலை - 2 வால் - 9 வயிறு - 10 - 5 x 2 மூலைகளில் - 20 - 5 x 4 சந்தி - 22 மீதம் - 33 கலிவிருத்தம் சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே வஞ்சித்துறை சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே `சேயாசேயா` - சேயவனே சேயவனே `தே` - கடவுளே. `தேய் ஆசு` - (எனது) சிறுமையைக் கெடு, `ஆசு ஏமா` - சிறுமைக்கு நமளாயுள்ளானே `யாமாயா` - (சத்திரூபமாகச் சுருங்கியிருந்து) வியக்திருப மாக விரியும் மாய மாயைக் கதிபதியே, `வா`- வந்தருள்வாயாக. `வாயா மாயாமா` - (உயிர்களோடத்து லிதமாயிருந்துமவைகட்குக்) கிட்டாத மகா சிவ ராத்திரியத்தனே. `வாயா` - உண்மைப்பாடுடையானே, `மாவாயா` - சிறந்த வாக்குடையானே, `மாயா` - மாய வித்தைகளுடையானே `சேமா`- சேமமுடையானே. `சேய்` - இளநலமுடையானே. `ஓயாநேயா` - (அன்பர் மாட்டு) ஒழியா நேயமுடையானே. `ஓயாய் ஏது` - (என் கண்ணதாய) ஏதெனுங் குற்றத்தை யொழித்தருள், `ஆள்` -ஆண்டருள்.

Thursday, October 27, 2022

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

ஞானத்தேடல் - Ep 60 - சித்திரக்கவி - ஏகநாகபந்தம் - (Gnanathedal)



சித்திரக்கவி - ஏகநாகபந்தம்


வந்தறந் தோய்ந்தி வையமுயத் தந்தநம் வாமிசுதன் 

தந்திரஞ்சேர் மதமார்வார் முன் சாய்ந்தவபோதனுசன் 

சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய் செந்தில் 

வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சிதசிவ


இவ்வுலக முக்திக்காக, முருகப் பெருமான் அனைத்து உன்னத குணங்களுடனும் வந்தார். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர் காலில் விழுவார்கள். இவரை வழிபடும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தமிழ் மக்களாகிய நமக்கு அவரைப் பிறப்பித்த சிவபெருமானைப் போற்றுகிறோம்


என்ராமச் சந்திரன் இன்ப மலிசத்தி 

என்னவே தன்பேர்சீர் மன்னவே - வன்புவியிற் 

பல்லூழி வாழிகவி யேற்றல்மா வாணியவள் 

நல்கல்பூ வாகையருள் நன்கு.


என் ராமச்சந்திரன் என்றும் இன்பமிக்க செல்லப் பெயர் சத்தி யென்றும் யாவரும் கூறக்கூடிய தனது பேரும் புகழும் நிலைபெற, வலிமையான பூமியின் கண்ணே கவிகளையேற்றலால், இலக்குமி யும் சரசுவதியும் அழகிய வெற்றிமாலையும் நன்றாகக் கொடுக்க அருள் தங்கித் தலைவன் பல்லூழி வாழ்க,


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html


Sunday, October 16, 2022

ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 2


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 2


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


புறநானூறு


பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13),


வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் (21)


மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல (25)


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (60)


மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (117)


வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (122)


வானம் மீன்பல பூப்பின், ஆனாது (125)


பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் (270)


மாரி வானத்து மீன் நாப்பண் (396)


பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

பாடியவர்: கூடலூர்கிழார்



ஆடிய லழற்குட்டத்

தாரிரு ளரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காய்ப்

பங்குனியுய ரழுவத்துத் 


தலைநாண்மீ னிலைதிரிய

நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்

தொன்னாண்மீன் றுறைபடியப்

பாசிச் செல்லா தூசி முன்னா

தளக்கர்த்திணை விளக்காகக்


கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்

பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்

நோயில னாயி னன்றுமற் றில்லென


அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

மைந்துடை யானை கைவைத் துறங்கவும்

திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்

காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்


காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்

மேலோ ருலக மெய்தின னாகலின்

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்

தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்


களந்து கொடை யறியா வீகை

மணிவரை யன்ன மாஅ யோனே.