விவேக சிந்தாமணி கதைகள் - 1
விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Stories in Viveka Chithamani - 1
Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode
References
விவேக சிந்தாமணி - Viveka Chithamani
1. வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!
2. சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரிசொல் கேட்டு
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம்
3. புத்திமான் பலவான் வான் பலமுளான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கம் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே.
4. கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்
பிள்ளைத்தமிழ்
தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Pillai Tamizh
In Tamil literature there is a specific types of song where a favourite God or a hero is personified as a baby and songs are sung in praise indicating the various stages of the baby's life from 3 months to 21 months. That form is called the Pillaithamizh. Let's explore that in this episode...
References
பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal
பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi
ஆண்டாள் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது.
பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.
காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன்முத
லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்
- பன்னிருபாட்டியல்
சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய
அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து "
- வெண்பாப் பாட்டியல்
பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின்
மூன்று முதலா மூவே ழளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.”
“ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்''
- பன்னிருபாட்டியல்
திருந்திய பெண்மக வாயின் விரும்பிய
பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர்
பெண்பா லாயிற் பின்னர் மூன்று
மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்
சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து
மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும்
சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி யூசல்
யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு
வேண்டுத றானும் விளம்பினர் புலவர்
பின்னைய மூன்றும் பேதையர்க் காகா
ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்
பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்
- இலக்கண விளக்கப் பாட்டியல்
ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்
• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ சந்திரா வாவென்று
நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம்
கோநிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
- பெரியாழ்வார் பாசுரம்
பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன்முகம்
மாய மந்திரந்தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே.
பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும்.
ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.
ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக
* அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார்.
* சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதியுள்ளார்.
* அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதினார்.
* வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதினார்.
வாகடம் என்றால் மருத்துவ நூல்.
* ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத்தமிழ் என்பது அமைந்துள்ளது.
நாதன் விளையாட் டறுபத்து நாலு நடத்தும் தமிழ்மதுரை
நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தருட்புலவர்
ஓதும் தலைச்சங் கத்தினுக்கு முயர்நா னூற்று நாற்பதுடன்
ஒன்பதான தமிழ்ப்புலவ ரொழியா இடைச்சங் கத்தினுக்கும்
வேத னிகர்நக் கீரர்முதல் விரிவா நாற்பத் தொன்பதுபேர்
மேவும் கடைச்சங் கத்தினுக்கும் விதிசொல் குருவா மகத்தியற்கும்
ஆதி குருவா மாறுகுணத் தமலா தாலோ தாலேலோ
ஆல வாய்வா ழாறுமுகத் தையா தாலோ தாலேலோ.
- க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் பாடல்
பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Stages of Women
In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode...
பேதை: 5-7 வயது பெதும்பை: 8-11 வயது மங்கை: 12-13 வயது மடந்தை: 14-19 வயது அரிவை: 20-25 வயது தெரிவை:25-31 வயது பேரிளம்பெண்: 32-40 வயது
ஏழு நிலையு மியம்புங் காலைப் பேதை பெதும்பை மங்கை மடந்தை யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே. - பன்னிரு பாட்டியல் - 220
பேதை : 1 முதல் 8 வயது வரை பெதும்பை : 9 முதல் 10 வயது வரை மங்கை : 11 முதல் 14 வயது வரை மடந்தை : 15 முதல் 18 வயது வரை அரிவை : 19 முதல் 24 வயது வரை தெரிவை : 25 முதல் 29 வயது வரை பேரிளம் : பெண் 30 வயது முதல்
பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. - 221
பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். - 222
மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும். - 223
மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். - 224
அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. - 225
தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது. - 226
ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது பேரிளம் பெண்டுக் கியல்புஎன மொழிப. - 227
பேதை தனக்குப் பிராயமும் ஏழு. பெதும்பை ஒன்பது ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும் ஒளிர் மடந்தை மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவைச் சாதி மூவேழ் எனும், பேரிளம் நாலெட்டு தையலர்க்கே - தனிப்பாடல்
திருக்கைலாய ஞானஉலா
பேதை (அறியா வெகுளிப் பருவத்தாள்)
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள்;
மலரின் பருவங்கள்
மலர்கள் பற்றி கூறாத இலக்கியங்கள் இல்லை எனலாம். இறையை வணங்கும் போதும், காதல் அறிவிக்கும் போதும், மென்மையை குறிப்பிடும் போதும் மலர்களோடு ஒப்புமை செய்யப்படும். ஆனால் மலர்களுக்கு பருவங்கள் வகுத்து, அந்த பருவங்களுக்கு பெயரும் கொடுத்துள்ளது நம் இலக்கியங்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Stages of a flower
Flowers are described in almost all Tamil literature. Flowers are used to worship of the Gods, to express love and to compare with softness. However, our literature has classified different stages of a flower and also named each stage, let's explore that in this episode...
References
குறுந்தொகை - Kurunthokai
அகநானூறு - Aganaanooru
திருவாசகம் - Thiruvaasagam
திருக்குறள் - Thirukkural
## குறுந்தொகை
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
## பூக்கும் பருவத்தின்
முதல் நிலை - அரும்பு
மொக்குவிடும் நிலை - மொட்டு
முகிழ்க்கும் நிலை- முகை
பூவாகும் நிலை - மலர்
மலர்ந்த இதழ் விரிந்த நிலை - அலர்
வாடும் நிலை - வீ
வதங்கிக் கிடக்கும் நிலை - செம்மல்
அரும்பு ,நனை ,முகை, மொக்குள்,
முகில், மொட்டு,போது, மலர் , பூ , வீ ,
பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள்.
அரும்பு - அரும்பும் நிலை
நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை
முகை - தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில
மொக்குள் - பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம் அதாவது
மணம் பெறும் நிலை. மொக்குள் பருவத்தில்தான் பூவில்
மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும்.
முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ்.
போது - மொட்டு மலரும்போது ஏற்படும் புடைப்பு நிலை
மலர் - மலரும் பூ அதாவது மலர்ந்த நிலை
பூ - முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர்
வீ - உதிரும் நிலையில் இருக்கும் பூ
பொதும்பர் - பூக்கள் பூத்துக்குலுங்கி நிற்கும் நிலை பொதும்பர்
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ
செம்மல் - உதிர்ந்த பழம் பூ
## அகநானூறு
புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
சுரிமுகிழ் முசுண்டைப் பொதியவிழ் வான்பூ
# திருவாசகம்
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
## திருக்குறள்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்
முகைமொக்குள் உள்ள நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு
பஞ்சபூதங்களும் இலக்கியமும்
உலக இயக்கத்தின் முக்கிய பங்கு பஞ்சபூதங்களுக்கு உண்டு. உலகையும் இயக்கி புலவர்களையும் இயக்கி இலக்கியதில் இடம் பெற்று உலகமக்களாலும் வழிபடப் பெற்று விளங்கும் பஞ்சபூதங்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
The Five Elements of Nature and Tamil Literature
The Five elements of nature are important for the functioning of life in this planet. They direct the poets' thoughts and takes a place in the literature and is also worshipped by the people. Let's see about what literature says about the five elements of nature in this episode...
References
தொல்காப்பியம் - Tholkaappiyam
புறநானூறு - Puranaanooru
பரிபாடல் - Paripaadal
நாலாயிர திவ்ய பிரபந்தம் - Naalayira Dhivya Prabandham (Thirumazhisai Azhwar Thiruchandha Viruththam)
அகம் புற ஆராய்ச்சி விளக்கம் - Agam Puram Aaraachi Vilakkam
குறள்மூலம் Avvaiyar Kural Moolam
திருவாசகம் - Thiruvaasagam - Pottri Thiruagaval
அபிராமி அந்தாதி - Abirami Andhadhi
திருக்குறள் - Thirukkural
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
- தொல்காப்பியம்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்
- புறநானூறு
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்தியாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே,
இரண்டின் உணரும் வளியும் நீயே,
மூன்றின் உணரும் தீயும் நீயே,
நான்கின் உணரும் நீரும் நீயே,
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே.
அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்!
- பரிபாடல் நல்லெழுதியார்
பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே?
- திருமழிசைப்பிரான் திருச்சந்த விருத்தம்
நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண் (5)
- ஔவையார் குறள்மூலம்
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
- போற்றித் திருஅகவல் திருவாசகம்
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.
- அபிராமி அந்தாதி
திருக்குறளும் பஞ்சபூதம்
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு (27)
- திருக்குறள்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்