Monday, February 28, 2022

ஞானத்தேடல் - Ep 34 - கவி காளமேகம் பாடல்கள் - 2 (Gnanathedal)


 கவி காளமேகம் பாடல்கள் - 2

காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கத்துக் கடல்சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும்போதில் அரிசி வரும் – குத்தி உலையில் இட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம் நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும் வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார்

Friday, February 18, 2022

ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal)

 


கவி காளமேகம் பாடல்கள் - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக் கொடுப்ப ரணிவர் குழைக்கு காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா தத்தித்தா தூதித்தா தூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்தா தூதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தோது தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி

ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)

 


கவி காளமேகம் வரலாறு -2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான் செய்யாத செய்த திருமலைராயன்வரையில் அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற் கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் மண்மாரி யாலழிய வாட்டு நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்; பாணந்தான் மண்தின்ற பாண​மே தாணு​வே! சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ ​நேரார் புர​மெரித்த ​நேர் வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசுகவி காள மேகமே – பூசுரா விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன் மண்தின்ற பாணமென்ற வாய்.

Tuesday, February 08, 2022

ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)

 


கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர​​ மென்​றே யகில மறியத் துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குத​னைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற் ​சொற் சந்தமா​லை ​சொல்லத் துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற் ​றொ​கைபட விரித்து​ரைக்கப் பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற் பரணி​யொரு நாண் முழுது​மே பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே பகரக் ​கொடிக் கட்டி​னேன் சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன் சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல் திருட்டுக் கவிப் புலவ​ரைக் காதங்கறுத்துச் ​சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் பு​டைத்து ​வெற்றிக் கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு கவி காள​மேக நா​னே விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும்.


ஞானத்தேடல் - Ep 30 - விதியை மதியால் வெல்ல முடியுமா?(Gnanathedal)

 


விதியை மதியால் வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது பற்றி நம் முன்னோர்களும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate can it be won? Fate is believed to be what is written, let's explore what our ancestors, poets and Tamil literature have mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை, நல்வழி - Avvaiyar Moodhurai, Nallvazhi திருக்குறள் - Thirukkural தாயுமானவர் பாடல்கள் - Thayumaanavar Padalgal விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித் தம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்னருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே - தாயுமானவர் அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் - திருஞானசம்பந்தர் ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன் - ஔவையார் சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம் இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் - ஔவையார் தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி - ஔவையார் வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. - ஔவையார்

Thursday, January 20, 2022

ஞானத்தேடல் - Ep 29 - விதி பற்றி இலக்கியங்கள் (Gnanathedal)


 

விதி பற்றி இலக்கியங்கள்

விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate - What literature says Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai திருக்குறள் - Thirukkural வில்லிபாரதம் - Villibharatham சிலப்பதிகாரம் - Silappadhikaaram பாரதியார் பாடல்கள் - Bharathiar Paadalgal அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம் நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம் அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே? நரி வகுத்த வரையினிலே தெரிந்து சிங்கம் தழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழது உஞற்று பவர் (620) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (380) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377) மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’

Wednesday, January 12, 2022

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன் கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா இருந்தேனுக் கெங்கே யிடம். விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும் வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது. சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி