Saturday, November 12, 2022

ஞானத்தேடல் - Ep 62 - சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலதா யும்பர் தெருளின் மருவாசீர்ச் சீரே பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு குன்றே தெருள வருள் அறத்தினது அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள் அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழை யுடையாய்! குற்றமில்லாத ஏகரூபத்தை யுடையால்! உமையோடு பொருந்தின மலை போல்வாய்! யாங்கள் தெளிய அறிவை அருள் வாயாக. மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதித் திருநிலா வானஞ் சுருங்கு மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி அடைந்தவருள்ளத்தே கெடாத விளக்கமாயுள்ளாய்! நஞ்சின்கணுண்டாகிய பெருகிய நிற நிறைந்து பொருந்தின திருமிடற்றையுடைய பெரிய சோதியாயுள்ளாய்! அழகிய மதியை யுடைய ஆகாயமானது சிறுகப் பெருகிய வொளியே திருமேனியா யுள்ளாய். எனதுள்ளம் நினதடியை மறக்கு மெல்லையை யொழிப் பாயாக. மொத்தம் - 118 சுருங்கியது - 96 தலை - 2 வால் - 9 வயிறு - 10 - 5 x 2 மூலைகளில் - 20 - 5 x 4 சந்தி - 22 மீதம் - 33 கலிவிருத்தம் சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே வஞ்சித்துறை சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே `சேயாசேயா` - சேயவனே சேயவனே `தே` - கடவுளே. `தேய் ஆசு` - (எனது) சிறுமையைக் கெடு, `ஆசு ஏமா` - சிறுமைக்கு நமளாயுள்ளானே `யாமாயா` - (சத்திரூபமாகச் சுருங்கியிருந்து) வியக்திருப மாக விரியும் மாய மாயைக் கதிபதியே, `வா`- வந்தருள்வாயாக. `வாயா மாயாமா` - (உயிர்களோடத்து லிதமாயிருந்துமவைகட்குக்) கிட்டாத மகா சிவ ராத்திரியத்தனே. `வாயா` - உண்மைப்பாடுடையானே, `மாவாயா` - சிறந்த வாக்குடையானே, `மாயா` - மாய வித்தைகளுடையானே `சேமா`- சேமமுடையானே. `சேய்` - இளநலமுடையானே. `ஓயாநேயா` - (அன்பர் மாட்டு) ஒழியா நேயமுடையானே. `ஓயாய் ஏது` - (என் கண்ணதாய) ஏதெனுங் குற்றத்தை யொழித்தருள், `ஆள்` -ஆண்டருள்.

No comments:

Post a Comment