Thursday, October 27, 2022

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

No comments:

Post a Comment