Wednesday, March 23, 2022

ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

 

ஆணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal புறநானூறு - Puranaanooru ஐங்குறுநூறு - Ainkurunooru கம்பராமாயணம் - Kambaramayanam பொருநராற்றுப்படை - Porunaraatruppadai பெரும்பாணாற்றுப்படை - Perumpaanaatruppadai திருப்புகழ் - Thiruppugazh பரத சேனாபதீயம் - Bharatha Senapathiyam கந்தர் அந்தாதி - Kandhar Andhaadhi பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi திருப்பாணாழ்வார் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram பாலன்:  1 முதல் 7 வரை மீளி:  8 முதல் 10 வரை மறவோன்: 11 முதல் 14 வரை  திறவோன்: 15 வயது  காளை: 16 வயது  விடலை: 17 முதல் 30 வரை முதுமகன்: 30 வயதுக்கு மேல் காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே பாலன் யாண்டே ஏழ்என மொழிப மீளி யாண்டே பத்துஇயை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந்து ஆகும் பதினாறு எல்லை காளைக்கு யாண்டே அத்திறம் இறந்த முப்பதின் காறும் விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன் நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப - பன்னிருப் பாட்டியல் ### பாலன் வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே - பெரியாழ்வார் திருமொழி செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே - கந்தர் அந்தாதி சே புங்கவ சங்கர பாலக தெய்வ வாவி அம்பு சே புங்கவ சங்கு அரி மருகா என சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் கணும் தெய்வயானைத் (தனச்) செப்பும் கவசம் புனை புயன் பாதம் என் சென்னியதே ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. - திருப்பாணாழ்வார் பாசுரம் உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே - பரத சேனாபதீயம் குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் - திருப்புகழ் ### மீளி கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி - பெரும்பாணாற்றுப்படை ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு - பொருநராற்றுப்படை ### மறவோன் நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் - கம்பராமாயணம் ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன் - கம்பராமாயணம் ### காளை அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே - புறநானூறு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு ### விடலை புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே - ஐங்குறுநூறு களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே - ஐங்குறுநூறு ###முதுமகன் வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் -மணிமேகலை நன் றாய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன் வாய் போகாது, ஒன்று புரிந்த ஈரி ரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் - புறநானூறு தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு - புறநானூறு * உறையூர் முதுகண்ணன் சாத்தனார் * பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி * உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்)

No comments:

Post a Comment