Wednesday, March 23, 2022

ஞானத்தேடல் - Ep 37 - பெண்ணின் பருவங்கள் (Gnanathedal)


பெண்ணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Stages of Women

In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode...

References

வெண்பாப் பாட்டியல் - Venba Paatiyal
மஹாபரத சூடாமணி - Mahabharatha Soodamani
பன்னிரு  பாட்டியல் - Panniru Paatiyal
திருக்கைலாய ஞானஉலா - Thirukailaya Gnana Ulaa

உலா இலக்கணம்

திறந்தெரிந்த பேதைமுத லெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்தகலி
வெண்பா வுலாவாம்
- வெண்பாப் பாட்டியல்

பேதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு
- மஹாபரத சூடாமணி

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை:25-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே. 
- பன்னிரு  பாட்டியல் - 220

பேதை          : 1 முதல் 8 வயது வரை
பெதும்பை : 9 முதல் 10 வயது வரை
மங்கை       : 11 முதல் 14 வயது வரை
மடந்தை      : 15 முதல் 18 வயது வரை
அரிவை      : 19 முதல் 24 வயது வரை
தெரிவை     : 25 முதல் 29 வயது வரை
பேரிளம்      : பெண் 30 வயது முதல்

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. - 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். - 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்

திரண்ட பதினா லளவும் சாற்றும். - 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்

திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். - 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. - 225

தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது. - 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்புஎன மொழிப. - 227


பேதை தனக்குப் பிராயமும் ஏழு. பெதும்பை ஒன்பது
ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும் ஒளிர் மடந்தை
மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவைச்
சாதி மூவேழ் எனும், பேரிளம் நாலெட்டு தையலர்க்கே
- தனிப்பாடல்

திருக்கைலாய ஞானஉலா

பேதை (அறியா வெகுளிப் பருவத்தாள்)

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்;

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்

பெதும்பை

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்

மங்கை

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள்

மடந்தை

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்

அரிவை

செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள்

தெரிவை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்

பேரிளம்பெண்

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள்

No comments:

Post a Comment