Monday, February 28, 2022
ஞானத்தேடல் - Ep 34 - கவி காளமேகம் பாடல்கள் - 2 (Gnanathedal)
கவி காளமேகம் பாடல்கள் - 2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கத்துக் கடல்சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும்போதில் அரிசி வரும் – குத்தி உலையில் இட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம் நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும் வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார்
Friday, February 18, 2022
ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal)
கவி காளமேகம் பாடல்கள் - 1
காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Kavi Kaalamegam - Songs - 1
Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode...
References
காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal
ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக்
கொடுப்ப ரணிவர் குழைக்கு
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
தத்தித்தா தூதித்தா தூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா தூதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தோது
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)
கவி காளமேகம் வரலாறு -2
காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Kavi Kaalamegam - Life History - 2
Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode...
References
காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal
கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்
செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு
நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான் மண்தின்ற பாணமே தாணுவே!
சீர்ஆரூர் மேவும் சிவனே! நீஎப்படியோ
நேரார் புரமெரித்த நேர்
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.
Tuesday, February 08, 2022
ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)
கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர மென்றே யகில மறியத் துதிமதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குதனைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூதைந்து நாழிகையிலாறு நாழிகைதனிற் சொற் சந்தமாலை சொல்லத் துகளிலாவந் தாதியேழு நாழிகைதனிற் றொகைபட விரித்துரைக்கப் பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற் பரணியொரு நாண் முழுதுமே பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடிக் கட்டினேன் சீதஞ்செயுந் திங்கண் மரபினானீடு புகழ் செய்ய திருமலைராயன்முன் சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல் திருட்டுக் கவிப் புலவரைக் காதங்கறுத்துச் சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமீட்டேறு கவி காளமேக நானே விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும்.
ஞானத்தேடல் - Ep 30 - விதியை மதியால் வெல்ல முடியுமா?(Gnanathedal)
விதியை மதியால் வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது பற்றி நம் முன்னோர்களும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate can it be won? Fate is believed to be what is written, let's explore what our ancestors, poets and Tamil literature have mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை, நல்வழி - Avvaiyar Moodhurai, Nallvazhi திருக்குறள் - Thirukkural தாயுமானவர் பாடல்கள் - Thayumaanavar Padalgal விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித் தம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்னருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே - தாயுமானவர் அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் - திருஞானசம்பந்தர் ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன் - ஔவையார் சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம் இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் - ஔவையார் தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி - ஔவையார் வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. - ஔவையார்