Tuesday, February 08, 2022

ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)

 


கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர​​ மென்​றே யகில மறியத் துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குத​னைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற் ​சொற் சந்தமா​லை ​சொல்லத் துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற் ​றொ​கைபட விரித்து​ரைக்கப் பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற் பரணி​யொரு நாண் முழுது​மே பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே பகரக் ​கொடிக் கட்டி​னேன் சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன் சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல் திருட்டுக் கவிப் புலவ​ரைக் காதங்கறுத்துச் ​சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் பு​டைத்து ​வெற்றிக் கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு கவி காள​மேக நா​னே விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும்.


No comments:

Post a Comment