Monday, February 28, 2022
ஞானத்தேடல் - Ep 34 - கவி காளமேகம் பாடல்கள் - 2 (Gnanathedal)
கவி காளமேகம் பாடல்கள் - 2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கத்துக் கடல்சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும்போதில் அரிசி வரும் – குத்தி உலையில் இட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம் நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும் வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார்
No comments:
Post a Comment