Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

      நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

      பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

      சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்

      எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே


கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

     கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்

     ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

     பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்

     பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)


 பதார்த்த குண விளக்கம் 


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம்  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode


References


வைத்திய வித்வன்மணி சி.  கண்ணுசாமிப்  பிள்ளை அவர்கள்


- மூல, தாது, ஜீவ வர்க்கம்

- Binomial Nomenclature


பித்தகாரி - Cholagogue

விஷநாசகாரி - Antidote

தாதுக்ஷீணரோதி - Antiseptic

பூதிகந்தநாசினி - Disinfectant

சமனகாரி - Sedative

உற்சாககாரி - Stimulant

பலகாரி - Tonic

மலகாரி - Laxative

நித்திராகாரி - Hypnotic

கபஹரகாரி - Expectorant


- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்

- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு


அளத்தல்


60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)

8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)

6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)

4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)

8 ஆழாக்கு - 1 படி (~1.4L)

சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்


நிறுத்தல்.


4 நெல் எடை - 1 குன்றிமணி

4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)

32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)

40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)

10 விராகனெடை - 1 பலம் (40gm)


8 குன்றிமணி - 1 gm


வேறு.


1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)

3 தோலா - 1 பலம் (40gm)

8 பலம் - 1 சேர் (320gm)

5 சேர் - 1 வீசை (1600gm)

8 வீசை - 1 மணங்கு (12.8kg)

ஞானத்தேடல் - Ep 84 - அனுபவ ஞானம் - 1 - (Gnanathedal)

அனுபவ ஞானம் 


ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே


மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்

ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே

 

Thursday, May 11, 2023

ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 4

தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Tamil and Science - 1

Let's see about the details found in Tamil literature about science in this episode


References

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுவற நின்ற கலப்ப துணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்

தணிவற நின்றனன் சராசரந் தானே.

Wednesday, April 19, 2023

ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை, குறுநறுங்கண்ணி, உந்தூழ், வேரல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு



உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்


குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,


‌


மணிச்சிகை


இதனைச் செம்மணிப்பூ என்கிறார் நச்சினார்க்கினியர்


மணி உருவில், மணி(நீல) நிறத்தில் சிகை(தலைமுடி) போன்ற நார்களுடன் பூத்துக் கிடக்கும் பூ மணிப்பூ


குறுநறுங்கண்ணி


ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.


குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?


குன்றிமணி போல்வ செங்கண் – திருமுருகாற்றுப்படை


குன்றின் யன்ன கண்ண – அகநானூறு


புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து (277)


உந்தூழ்


உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/6


முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் - அகம் 78/8

‌


பாம்பு உமிழ் மணியின் தோன்றும்

முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே



இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு

ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை - மலைபடுகடாம்


‌ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

- குறுந்தொகை - 18


வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி

அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய

முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு

எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .

மலைபடுகடாம்


வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து...

ஆர முழுமுதல் உருட்டி வேரல்

பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு

விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த


பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும்

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்

மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே.

- குறுந்தொகை 68

Monday, April 03, 2023

ஞானத்தேடல் - Ep 81 - சித்திரக்கவி - திரிபங்கி - (Gnanathedal)


 சித்திரக்கவி - திரிபங்கி 


ஆதரந் தீரன்னை போலினியாய் அம்பிகா பதியே

மாதுபங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண்முடியாய்

ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்

ஓதுமொன் றே!உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே


தாயைப் போல் இனிமை செய்பவனே! அம்பி கைக்குத் தலைவனே! உமையை இடப்பாகத்தில் உடையவளே! கையில் நெருப்பைத் தாங்கிய சடைக் கடவுளே! மணந்தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனே! குற்றத்திலிருந்து நீங்கி தின்ன ருள் பெற்று வாழ்ந்தவர்களுடைய துன்பஞ் சூழ்ந்த இருவினை களைத் தீர்க்கின்ற எம்முடைய கடவுளே! வீட்டின்பத்தையுடைய வர்கள் போற்றுகின்ற ஒப்பற்ற பொருளே! எண்ணுபவர்களுக்கு அமுதத்தைப் போன்றவனே! தேவர்களுக்குத் தலைவனே! என்னுடைய அவாவைத் தீர்ப்பாயாக!


ஆத ரந்தீர்

மாது பங்கா!

ஏத முய்ந்தார்

ஓது மொன்றே


உய்ந்தவர் போற்றும் மாதொரு பங்கன்


அன்னைபோ லினியாய்

வன்னிசேர் சடையாய்

இன்னல்சூழ் வினைதீர்

உன்னுவா ரமுதே


தாயை போல் அன்பு கொண்டவன். வன்னி மரத்தின் மலர்களை சூடுபவன். தீவினைகளையும் இடர்களையும் தீர்ப்பவன். போற்றுவார்க்கு அமுதை போன்றவன்.


அம்பிகா பதியே

வம்புநீண் முடியாய்

எம்பிரா னினியார்

உம்பர்நா யகனே


அம்பிகையின் தலைவன். நீண்ட சடைமுடி உடையவன். உயர்ந்தோரின் கடவல், தேவர்களின் தலைவன்


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

ஞானத்தேடல் - Ep 80 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மாம்பூ - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


கடிகமழ்கலிமா, கவிழ்இணர்மா 

- குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.


மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் - திருமுருகாற்றுப்படை


நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை

ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று

கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்

கடுங்கண் யானை கானம் நீந்தி

இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி            5

**பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன**

**நன் மா மேனி** பசப்ப

நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே

- குறுந்தொகை


மாவின்  தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து

ஈர்க்கி னரும்பிய திதலையர் – மதுரைக்காஞ்சி


பலவின் சுளையும்

வேறுபடக் கவினிய தேமாங் கனியும் 

– மதுரைக்காஞ்சி


வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38


மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே

கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்

பாவிடை யாடுகுழல் போற் கரந்து பரந்ததுள்ளம்

ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


காமர் மாஅத்துத் தாதலர் பூவின் வண்டு வீழ்பு அயருங் கானல்   - குறுந்தொகை


கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ

மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்

- அகநானூறு