Thursday, December 02, 2021

ஞானத்தேடல் - Ep 22 - குருவின் பெருமை (Gnanathedal)


குருவின் பெருமை

ஒருவருக்கு குரு (ஆசான்) என்பவரின் முக்கியத்துவம்  பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று  இப்பதிவில் பார்ப்போம்...  

The importance of Guru 

Let's explore the what Tamil literature talks about the importance of Guru (Teacher) in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

தொல்காப்பியம் - Tholkaappiyam

ஔவையார் குறள்மூலம்  - Avvaiyar Kural Moolam

கந்தர் அநுபூதி  - Kandhar Anuboothi

திருக்குறள் - Thirukkural

சித்தர் பாடல்கள் - Siddhar Songs

குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. 

குரு என்றால் ஒளி

'குரு' என்ற சொல் 'ஒளி' என்றும் பொருள்படும். 

அதனால் தான் கண்களில் ஒளியிழந்தவனைக் 'குருடன்' என்கிறோம். 

வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான்.

ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம்.

குரு என்றால் செம்மை

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே
 - தொல்காப்பியம் 2-8-5

இரத்தத்தைக் "குருதி" என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். 

குரு என்றால் முளைப்பு

வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் "குருத்து" என்று சொல்வது அதன் முளைப்பை வைத்து. 

எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. 

குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே 
- திருமந்திரம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
- திருமந்திரம்

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்
- ஔவையார் குறள்மூலம்

தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்
- ஔவையார் குறள்மூலம்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
- கந்தர் அநுபூதி

Friday, November 26, 2021

ஞானத்தேடல் - Ep 21 - உடல்நலம் உயிர்நலம் (Gnanathedal)


 உடல்நலம் உயிர்நலம் 

உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று  இப்பதிவில் பார்ப்போம்...  

Wealth called health 

Let's explore the what Tamil literature talks about health in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural

சித்தர் பாடல்கள் - Siddhar Songs


காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா

காயமே இது மெய்யடா
அதில் கண்ணும் கருத்தும் வையடா

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே


Wednesday, November 17, 2021

ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)


சாபத்தின் வலிமை 

பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Power of Curse

Let's explore the power of curse in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural


ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில்  மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

Wednesday, November 10, 2021

ஞானத்தேடல் - Episode 19 - தொல்காப்பியத்தில் ஆறு அறிவு (Gnanathedal)


 தொல்காப்பியத்தில் ஆறு அறிவு

மனிதர்களுக்கு ஆறு அறிவு என்பதை தொல்காப்பியர் தனது படைப்பான தொல்காப்பியத்தில் வகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு அறிவு உயிரினத்திற்கும் உதாரணங்களோடு  குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமூட்டுவது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Six Senses in Tholkappiyam

Humans have six senses and this was described by Tholkaappiyar in detail in his work Tholkaappiyam. He not only describes those senses but also provides examples of species with those number of senses, which is fascinating piece of information. Let's explore that in this episode...

References

தொல்காப்பியம் -  Tholkaappiyam

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

Monday, November 08, 2021

ஞானத்தேடல் - Episode 18 - தங்கப்புதையல் ரகசியம் (Gnanathedal)


தங்கப்புதையல் ரகசியம்

யமாஷீட்டாவின் தங்கப்புதையல் பற்றிய செய்தி  உலகில் மிக பிரபலமாக உலா வந்தது. அதை இன்றும் தேடுவோர் உண்டு. அதுபோல தமிழ் நாட்டில் ஒரு புத்தல் ரகசியம் உண்டு, அதற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு. அது என்ன? வாருங்கள் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

A puzzle about a gold treasure

Yamashita's gold was popular in the news for a very long time. Still people are searching for it. Like Yamashita's gold there is an unsolved riddle that mentions about a gold treasure in Tamil Nadu. There is a story behind that treasure. Let's explore that in this episode...

Wednesday, October 27, 2021

ஞானத்தேடல் - Episode 17 - நிரோட்டகம் - அநாசிக இதழகல்


 நிரோட்டகம் - அநாசிக இதழகல் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நிரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  அநாசிக எழுத்துக்கள்: க, ச, ட, த, ப, ற, ய, ர, ல, வ, ள, ழ,  ஆகியவை. 

பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள். 

கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.   

இந்த அநாசிக எழுத்துக்களை கொண்டு ஒரு இதழகல் பாடல் பாடுவது என்பது மிக கடினமான ஒன்று. அதை மாம்பழ கவிச்சிங்க நாவலர்  பத்து நிமிடத்தில் பாடினார் என்பது மேலும் ஆச்சரியமூட்டும் செய்தி. 

இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்ட யமக அந்தாதி  வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 

Nirotagam Anaasiga Idhazhagal - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. 

Tamil language has nasals and non-nasals in its alphabets. Singing a poem that is an Idhazhagal, that too using only the non-nasals is an amazing task. The poet Mambazha Kavichchinga Naavalar wrote such a poem in 10 minutes.

Works like these enrich the Tamil language. In this episode let's explore that Nirotagam...

Wednesday, October 20, 2021

ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal)


யாருக்கு கடன் (கடமை) 

ஒருவர் பிறந்து வளரும்போது அவரை வளர்க்க பலருக்கு கடமை உண்டு. ஆப்படி யார் யாருக்கு என்ன என்ன கடமை என்பதை புரநானூற்று பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆது இன்றும் பல சந்தர்ப்பங்களில் பல இடத்திலும் பொருத்தமாக இருப்பது பெரும் வியப்பே. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... 

Whose responsibility?

Many people take responsibility in raising a child from childhood to adulthood. A song in Puranaanooru describes who has what responsibilities in raising a child. It is amazing to see that the message in the song applies to other situations and places as well. Let's explore that in this episode...